Search This Blog

Friday, August 22, 2014

துளசி

துளசி
 மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. வேறு பெயர்கள் துழாய் (நீல நிற துளசி. இதனை கிருஷ்ண துளசி எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி வகைகள் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) , காடு துளசி தாவர பெயர்கள் Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family) வளரும் தன்மை வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி. மருத்துவக் குணங்கள்தொகு சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.தொற்றுநோய்களை எதிர்க்கும்.சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்ஞாபக சக்தியை அதிகரிக்கும்வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும். துளசியின் மகத்துவம் துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். காட்டுத் துளசி இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர். குணமாகும் நோய்கள 1.உண்ட விஷத்தை முறிக்க. 2.விஷஜுரம்குணமாக. 3.ஜன்னிவாத ஜுரம் குணமாக. 4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க. 5.காது குத்துவலி குணமாக. 6.காது வலி குணமாக. 7.தலைசுற்றுகுணமாக. 8.பிரசவ வலி குறைய. 9.அம்மை அதிகரிக்காதிருக்க. 10.மூத்திரத் துவாரவலி குணமாக. 11.வண்டுகடி குணமாக. 12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக. 13.எந்த வியாதியும் உண்டாகமலிருக்க. 14.தோல் சம்பந்தமான நோய் குணமாக. 15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற. 16.அஜீரணம் குணமாக. 17.கெட்டரத்தம் சுத்தமாக. 18.குஷ்ட நோய் குணமாக. 19.குளிர் காச்சல் குணமாக. 20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக. 21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க. 22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க. 23.காக்காய்வலிப்புக் குணமாக. 24.ஜலதோசம் குணமாக. 25.ஜீரண சக்தி உண்டாக. 26.தாதுவைக் கட்ட. 27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 28.இடிதாங்கியாகப் பயன்பட 29.தேள் கொட்டு குணமாக. 30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 32.வாதரோகம் குணமாக. 33.காச்சலின் போது தாகம் தணிய. 34.பித்தம் குணமாக. 35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 37.சகல விதமான வாய்வுகளும் குணமாக. 38.மாலைக்கண் குணமாக. 39.எலிக்கடி விஷம் நீங்க. 40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 42.வாந்தியை நிறுத்த. 43.தனுர்வாதம் குணமாக. 44.வாதவீக்கம் குணமாக. 45.மலேரியாக் காய்ச்சல் குணமாக. 46.வாய்வுப் பிடிப்பு குணமாக. 47.இருமல் குணமாக. 48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 50.இளைப்பு குணமாக. 51.பற்று, படர்தாமரை குணமாக. 52.சிரங்கு குணமாக. 53.கோழை, கபக்கட்டு நீங்க.

No comments:

Post a Comment