Search This Blog

Friday, August 22, 2014

கும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில

கும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில் இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில்திருமஞ்சன வீதியில் உள்ளது. பழைய பெயர் முன்னர் இக்கோயில் வராகப்பிள்ளையார் கோயில் என்றழைக்கப்பட்டது. தல வரலாறு ஒரு காலத்தில் கும்பேசப்பெருமானைத் தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராகக்குளக்குரையில் வந்து தங்கினான். அங்கிருந்த விநாயகர் அந்தணச்சிறுவன்வேடங்கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். அவன் கொடுக்க மறுக்கவே அச்சிறுவன் (விநாயகர்) ஒரு கரும்பைப் பிடித்து இழுக்கவே அதனால் கோபங்கொண்ட வியாபாரி, விநாயகராகிய சிறுவனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு செல்ல, அப்போது சிறுவன் மேற்படி விநாயகர் கோயிலுக்குள் ஓடி மறைந்துவிட்டான். பிறகு வியாபாரியின் ஆயிரம் கரும்புகளும் சாரமற்றுச் சக்கை போல் ஆகிவிட்டன. இதை அறிந்த வியாபாரி வருந்தி விநாயகரிடம் வேண்டி நின்றான். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாரத்தைக் கொடுத்தார். அதுமுதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது. [1]

No comments:

Post a Comment