Search This Blog

Friday, August 22, 2014

கும்பகோணம் சக்கரபாணி கோயில

கும்பகோணம் சக்கரபாணி கோயில் சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். [1] இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார். மூலவர், தாயார்தொகு இத்தலத்தில் உள்ள மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார். கோவிலைப் பற்றிதொகு கோவில் அதன் அழகிய தூண்களுக்காக பிரசித்தி பெற்றதாகும். மூலவர், சக்கரபாணி சுவாமிக்கு 8 கைகள் உள்ளன. ராஜா சரபோஜின் நோய் இந்த கோவிலின் உள்ள கடவுளின் கிருபையால் குணப்படுத்த கூறப்படுகிறது, அதன் காரணமாக ஒரு வெண்கல படம் இங்கு உள்ளது.

No comments:

Post a Comment