" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Wednesday, August 20, 2014
பாவேந்தர் பாரதிதாசன் பாடல
இனபத் தமிழ் :
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment