" இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!". தமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேதமிழா தமிழா நாளை நம் நாளேதமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடாஎன் நாமம் இந்தியன் என்றே
Search This Blog
Tuesday, August 26, 2014
என்னவளே
காந்தி கணக்கு
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

சி. வி. ராமன்

திருவள்ளுவர்

ராணி லக்ஷ்மி பாய்

கம்பர்

மகாத்மா காந்தி
‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.பிறப்பு: அக்டோபர் 02, 1869இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியாபணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் இறப்பு: ஜனவரி 30, 1948நாட்டுரிமை: இந்தியன்பிறப்புமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்குஇந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.காந்தியின் தண்டி யாத்திரை1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.வெள்ளையனே வெளியேறு இயக்கம்1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை
பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.இறப்புஅகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

Sunday, August 24, 2014
தேங்காய் எண்ணெய்
தேங்காய் விலை கூடும் போதெல் லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவ தில்லை. அது ஏன்? எப்போது தான் கூடுகிறது ?கச்சா எண்ணெய் விலைகூடும்போது தான் விலை கூடுகிறது..கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெ ய்க்கும் -என்ன தொடர்பு ?கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய்
என்ப து தேங்காய் எண்ணையே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!சரி. வேறு என்ன தேங்காய் எண்ணெ ய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட் ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.மினரல் ஆயில் என்றால் என்ன ?பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொரு ளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண் ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொ ருளே இந்த மினரல் ஆயில் ஆகும். கச்சா எண் ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத் தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதி கம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விட லாம் ..பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை, எல்லாவிதாமான முக லோஷ ன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னு ம் அரக்கன் இருக்கிறான் என்பது வேத னையான விஷயம் தான்தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற – மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..johnson baby oil, amla hair oil,clinic plus, ervamartin hair oil, etc..பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது …மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?1.தோல் வறண்டு போகும். முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளை யாகும் 3.அரிப்பு வரும் ..4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந் தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களி ல் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடை த்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண் ணெய் யை வாங்காதீர்கள்குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை .

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி… உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது.1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால்உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இறக்கவில்லை அவர் உயிருடன்தான் இருந்திருக்கிறார். ஆம்! பண்டித ஜவஹர்லா ல் நேரு அவர்கள் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது பூத உடலுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அஞ்சலி செலுத்தும்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தை இணையத்தின் கிடைத்தததால்
வாசகர்களுக்காக இங்கு பகிர்ந்துள்ளேன்.

ஹிட்லர் சாகவில்லை
“என்ன, ஹிட்லர் சாகவில்லையா? (இவனது மரணத்திலும் மர்மம்)
தன் மக்களுக்காக போராடினால் தீவிர வாதியா? சர்வாதிகாரியா?இவன் பேச்சினால் ஈர்க்கப்பட்டவர்கள் பல கோடி!!!ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ் வளவு கோபம் வந்து விடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக் கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கி ன்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தா ன் ‘உயிருடன் இல்லை’ என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியிரு க்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும்வாழ்ந்திருக்கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன்Hitler as a babyஎன்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன்.உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள் இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப் பட்டு இருக்கின்றது.சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மை யில் இறந்தார்களா என்பதே மர்மங் களாக இருப்பதாக வரலாறு பதிந்து கொண்டது.அந்த நபர் யாரெ ன்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் நானே சொல்கிறேன். உலக வரலாற் றில் தன் பெயரை அழிக்க முடியாத கறையுடன், ஆழமாக ‘அடால்ஃப் ஹிட்லர்’ (Adolf Hitler)என்று எழுதியவன்.1945 இல் உலக வரலாற்றையே தலை கீழாகத் திருப்பிப் போட்ட வன் இந்த அடாலஃப் ஹிட்லர்(Adolf Hitler)இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரும், அவனது மனைவியான ஏஃபா பிரெளனும் தற்கொலை செய்து இறந்தது மட்டு மல்லாமல், அவர்கள் உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக் கூடாது என்பதால் பெட்ரோல் ஊற் றிக் கொளுத்தப் பட்டார்கள் என்பது தான் நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் வரலாறு. ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, அவன் தன் மனை வியுடன் தப்பிச் சென்று விட்டான் என்னும்செய்தி 66 வருடங் களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது. ஒட்டு மொ த்த உலகையும் தனி நபராக ஏமாற்றி விட்டு, தனக்குள்ளே சிரி த்துக் கொண்டு மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறை ந்திருக்கிறான் ஹிட்லர்.இவன் நடந்தாலே படைகள் நடுங்கும்!!!“என்ன ஹிட்லர் சாகவில்லையா’ என வாய் பிளந்தபடி கேள்வி கேட்ப தை உங்களால் தவிர்க்கவே முடியா து. அவன் உயிருடன் இருந்தான் என் பது தாங்க முடியாத ஒரு உணர்வை யே நமக்குக் கொடுக்கும். நீங் கள் இதை மறுக்கும் பட்சத்தில், இதை ஏன் நம்ப வேண்டும் என்பதற் குரிய தெளிவான விளக்கத்தை நான் கொடு க்க வேண்டும். எனவே நாம் 30.04.1945 அன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் (Berlin) நகரு க்குச் செல் வோமா…ஹிட்லரின் மரணம் என்னும் சம்பவத்தை அடிப் படையாகவைத்து இதுதான் நடந்தது என்று உலகமே நம்பும் விடய ங்களை முதலில் பார்ப்போம்.இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் ஜெர்ம னியின் ஆக்ரோசமான சக்தியைத் தனித்தனியாக எதிர்கொள்ள முடி யாத நாடுகள், ‘நேச நாடுகள்’ என் னும் பெயரில் ஒன்று சேர்ந்து ஜெர் மனியைத் தாக்கின.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்பன ஒரு பக்கத்தில் அணி சேர் ந்து தாக்க மறுபக்கத்தில் சோவியத் ரஷ்யா தாக்கத் தொடங்கியது. இந்தநான்கு நாடுகளின் ஒன்று சேர்ந்த தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 30.04.1945 இல் ஜெர் மனி தனது தோல்வியைத் தழுவிக் கொண்டது. இறுதிக் கட்டப் போரின் போது ஹிட்லர் பெர்லின் நகரில் அமைந்த அரசுத் தலைவரின் கட்டடத்து க்கு கீழே இருந்த ஒரு நிலக்கீழ் சுரங்கத் திலேயே இருந்தார். எதிரி நாடுகளின் குறிப்பாக ரஷ்யாவின் விமான குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ள அங்கேயே பதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவே அவனின் இறப்புக் கான கடைசி இடமாகவும் மாறியது என்றும் சொல்லப்பட்டது.ஹிட்லரின் இறுதி நாளில் என்ன செய்தான், எப்படி இறந்தான் என்பதை உலகிற்கே வெளிக்கொண்டு வந்தவர், 95 வயதாகியும் இன்றும் உயிரு டன் இருக்கும் ஹிட்லரின் மெய் பாது காப் பாளராக இருந்த ‘ரோஹுஸ் மிஷ்’ (Rochus Misch)என்பவர்தான். இந்த ரோஹுஸ் மிஷ் பிறந்தது 29.07.1917 ஆம் ஆண்டு. தனது 28 வது வயதில் அவர் ஹிட் லருடன் கடைசியாக இரு ந்திருக்கிறார். அவர் ஹிட்லரின் இறுதி நாள் பற்றி என்ன சொல்கிறார் என்ப தைப் பாருங்கள்…..!”ஏப்ரல் 30″ திகதி பங்கரில் உள்ள அனைவரையும் ஹிட்லர் அழைத்து எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். தேவையா னவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளட்டும். இப்படி அவர் சொன்னதால் அங்கு இருக்க வேண்டியவர்க ளில் நானும் ஒருவனானேன். ஹிட்ல ரும், ஏஃபாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவும் அப்போ து எடுக்கப்ப ட்டது. புரொபசர் ஹாஸெ ஹிட்லரிட ம் சொன்னார்.முதலாம் உலகயுத்தத்தில் சாதாரண போர்வீரன்!!!‘முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது நல்லதும்’ இதைக் கேட்ட பின்னர் ஹிட்லரும், ஏஃபா வும் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். நெடு நேரம் எந்த அசைவுகளும் இல்லை. அப்புறம் ஹிட்லரின் அறை யைத் திறப்பது என்ற முடிவுக்கு வந் தோம்.திறந்த போது நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். நான் கண்ட காட்சி, ஹிட் லர் பெரிய சோபாவில் இரத்தக் கறை யுடன் இறந்து கிடக்க, அருகில் இருந்த சிறிய சோபாவில் ஏஃபா பிரெள ன் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்னர் சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளி யே இருந்த இடத்தில் வைத்து பெட்ரோ ல் ஊற்றிக் கொளுத்தினார்கள் “.ஹிட் லரின் இறப்பைப் பற்றி முழுமையான தொரு அறிக்கையக் கொடுத்த ஒரே நப ரும், ஹிட்லருடன் இருந்து தப்பி ஒரே நபருமாக இருந்தவர் இந்த ரோ ஹுஸ் மிஷ்தான். ஹிட்லர் இறப்ப தற்கு இர ண்டு நாட்களின் முன்னர்தான் ஹிட்லரி ன் நண்பரும், இத்தாலியின் தலைவருமான முஸோலினியும் (Dr. Werner Hasse)அவரது மனைவி யும் கொல்லப்பட்டு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர் களது உடல் கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டுஅவமரியாதை செய்யப்பட்டிருந்ததை ஹிட்லர் அறிந்திருந்தார். அதனால்தான் எதிரிகளிடம் தனதும், ஏஃபாவுடையதும் உடல்கள் அகப்படக் கூடாது என்று ஹிட்லர் முடிவு செய்து, அதனால் எரிக்கப்பட்டது என்று ம் ஒரு கதை சொல்லப்பட்டது.மே 1 ஆம் திகதி ஜெர்மனிய வானொலி, ‘ஹி ட்லர் இறந்துவிட்டார்’ என்ற செய்தியை அறிவித்தது. அதற்கு அடுத்த தினம் அதாவ து 02.05. 1945 இல் ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது.அதோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை என்று அறிக்கையும் கொடு த்தது. ஆனால் சில மணி நேர ங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமை யான உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது. ஆனா ல் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், ஹிட்லர் தனக்னெ வைத்திருந்த ‘டூப்’ என்றும் அறிவித்தது ரஷ்யா. அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்து விட் டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட் லரின், பாதுகாப்புப்படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந் தார்.தாக்குதலும் கட்டளைகளும்!!!ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கு ம் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜெர்மனியிலே யே சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தில் ஜுலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு ‘ஒ பெரேசன் வால் கிரீ’ என்று பெயரும் இடப் பட்டிருந்தது.ஆனால் அது படுதோல்வியி ல் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட் டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதி கம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். அப்படி மொத்தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல் வார்கள். அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.இதன் பின்னர் ஹிட்லரும் ஏஃபாவும் தற்கொ லை செய்து அவர்கள் இருவரது உடல்களும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று ரஷ்யாவினால் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. உலகமும் அதை ஏற்று நிம்மதி பெரு மூச்சு விட்டது. ஹிட்லரின் உடல் கிடைத்ததோ இல்லையோ, அவன் இறந்தது என்று செய்தியே நமக்குப் போதும் என்று மகிழ்ச்சியுடன் இருந் தது.ரஷ்யா விட்ட அறிக்கைகள் இத்துடன் முடி ந்து விடவில்லை.இறுதியாக 1993 இல் ஹிட்லரி ன் இறப்புடன் சம்பந்தமான கடைசி அறிக்கை யையும் ரஷ்யா வெளியிட்டது.அந்த அறிக்கை இதுதான். ‘ஹிட்லர் இறந்தபோது, எந்த சோபாவில் இருந்து கொண்டு தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்தாரோ, அந்தஇரத்தம் தோய்ந்த சோபாவையும் ஹிட்லர் இறந்ததாகச் சொல்லப்பட் ட இடத்தில் எரிந்த நிலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று துளைத்த அடையாளத் துடன் கூடிய அவரின் மண்டையோட் டையும் மட்டும் எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்’ என்று இருந்தது.ஹிட்லரின் மரணம் சம்பந்தமாக உலகமே நம்பியிருக்கும் சம்பவங்க ள் இவைதான். இவையெல்லா வற்றிலும் இறுதியாக எஞ்சும் முடிவுகள் என்னவோ ஹிட்லரும்ஏஃபாவும் இறந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் இவையெல்லா மே பொய் யென்று நிரூபணமாகி, ஹிட்லரும் ஏஃபா வும் உயிருடன் தப்பினார்கள் என்னும் செய்தி இப்போது நம்மை அதிர வைக்கிற து.சிறுவர்களில் மிகவும் பாசமானவர்!!!ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று ஜுலை 1945லேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதைக் கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்ப டிச் சென்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமல்லை. அந்தக் கால த்தில் ‘இரும்பு மனிதர்’ என்று அழை க்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யா வின் அதிபரு மான ஜோசப் ஸ்டாலினேதான்.அதுவும் முக்கிய தலைவ ர்களான ட்ரூமன், சர்ச்சில் ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகி ரங்கமாக “ஹிட்லர் சாகவில்லை. ஸ்பெயினுக்கோ, அர்ஜென்டீனா வுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்” என்று கூறினார். அது மட்டு மில்லாமல், ஹிட்லரின் இற ப்பு சம்பந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை ‘ஒபெ ரேசன் மித்’ என்று பெயரிட்டு அதை ஆராயும்படி கட்டளையும் இட்டி ருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தே கத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.உலகிலேயே மிகவும் பலமானஉளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப் படையான றிமிகி (Konmitet Gesudarstvennoy Bezopasno sti).அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லா ம் தன்னுடனே வைத்திருக்கும் போது, எதற்கு ஹிட்லர் தப்பிவிட்டார் என்று சொல்ல வேண்டும்? ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன்ணிyth என்று பெயர் வைக்க வேண்டும்? ஹிட்லர் நீர் மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச்சொன் னார்? ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற் கான சாட்சியங்களை இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.ஹிட்லர் கால் பதிக்காத இடம் ஏது!!!இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனா வுக்கு நீர் மூழ்கிக் கப்பலின் மூலம் தப்பிவிட்டார் என்பதைப் பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரி க்காவின் பிகியி ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதைஉறுதி செய்தது. அதை அடிப்படை யாக வை த்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக் கையை பிகியி வெளியிட் டது. நடந்தது இதுதான் (என்று சொல் லப்படுகிறது).30.04.1945 அன்று ஹிட்லரும் ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய் யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனா ல் ஹிட்லரும், மனைவியும் அவர்க ள் மறைந்திருந்த பங்கரின் இன்னு மொரு இரகசிய வழியாக வெளியே வந்து அப்படியே நோர்வே நாட்டுக் குச்சென்றிருக்கிறார்கள் .நோர்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர் மூழ்கிக் கப்பலில் அர்ஜென்டீனா நோக் கிப் பிரயாணம் செய்திருக் கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்க ளில் ஹிட்லரின் படை யில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI)தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீ னாவுக்குச் சென் றிருந்தார் கள்.அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுப வர்கள், ஜோசப் மெங்கெலே (Josef Mengele)அடோல்ஃப் ஜக்மான்(Adolf Eichmann)பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl) எரிக் பிரீப்கே(Erich Priebke) க்ளெளஸ் பார்பீ (Klaus Barbie) என்பவர்களாவார் கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படை யில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்த வர்கள். அர்ஜென் டீனாவில் 30000க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பி யோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்து க் கொள்ளுங்கள்.ஜுலை 10ம் திகதி 1945 இல் அர்ஜென்டீனாவை ஸி530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்ம னிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க அர்ஜெட்டீனா ஒத்துழை த்தது. அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமி கள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் ஸி977 என்னு ம் ஜெர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர் மூழ்கிக் கப்பல்தெற்கு அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும்அதே கதைதா ன் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட் டது.ஆனால் ஹிட்லர் இறந்தார் என் று ஜெர்மனி அறிவித்த அன்றுவரை அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நோர்வே துறைமுகத்தில்தான்ஸி977 என்ற நீர் மூழ்கிக் கப்பல் நின்று கொ ண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி திடீரென நோர்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல் அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை. ஆனால் ஜெர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.இரண்டாம் உலகயுத்தம் ஹிட்லர்…!மொத்தமாக 102 நாட்கள் கடலினடி யிலேயே பிரயாணம் செய்தஸி977 பின்னர் அர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பல தலைவர் களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத் துடனும், சொத்துக்களுடனும் அர் ஜெடீனாவை வந்தடைந்தான் ஹிட்ல ர் என்று சொல்கிறார்கள் .அதன் பின் னர் அர்ஜென்டீனாவின் பல இடங்களி லிருந்து இரகசியமா, மிகவும் நம்பக த்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்தி கள்பிகியிஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இரு ந்திருக்கின்றனர். ஏஃபா ஜெர்மனியில் இருந்து தப்பும்போதே கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.’கிரே வோ ல்ஃவ்’ (Gray Wolf)என்னும் புத்த கத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையாளர் ஜெரார்ட் வில்லிய ம்ஸ் (Gerrard Williams) Sky News க்குக் கொடுத்த பேட்டியின்படி நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பு ம் ஆண்டுக்கு 17 ஆண்டுகள் கழித்து1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகி றது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட் லர்.வெற்றியோ தோல்வியோ பின்வாங்கதவன்!!!மது அருந்துதல் புகைப்பிடித்தல் மாமிசம் உண்ணு தல் என்பது ஹிட்ல ர்க்கு பிடிக்காதவை. என்னதான் சொன்னாலும் தான் தோற்பேன் என்று தெரிந்தாலும் எடுத்த முடிவுகளை மாற்றும் வழக்கம் இல்லாதவர் இவர். இறுதியில் ரஸ்யாவிடம் பணிந்ததும் இந்த முற்கோபத்தனத் தால்தான். ஆனால் என்னதான் ஆட்சி மிக்க ரஸ்யா வாக இருந்தாலும் ஹிட்லர் ஐ உயிருடனோ பிணமாகவோ பிடிக்க முடியவில்லையே! பல பிரபலங்களின் வாழ்க்கையின் முடிவு இப்படித்தான் என்ன நடந்தது என்று தெரியாமல் சர்ச்சிக்க வைக்கின்றன! யாருக்கும் அட ங்காதவன், அடிபணியாதவன் தன் நாட்டு மக்களுக்காக இறப்பு வரை பார்த்து விட் டு வந்தவன்! ஆனால் இன்றும் இவனுக் கு மிஞ்சிய பட்டம் சர்வாதிகாரி? காலத் தின் கோலமும், ஆட்சியில் இருந்த நய வஞ்சகர்களில் குணமும் ஹிட்லர் ஐ இன்று வரை கெட்டவனாக சித்தரித்துக் கொண்டு இருக்கின் றன.!!!“ஹில்டர்…ஹிட்லர் அழிவில்லாதவன்; அழிக்க முடியாதவன்!!!”

Saturday, August 23, 2014
ஆனந்த்பயணம்
சதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்
என் பெயர் ஆனந்த்
சதுரகிரி மலைக்கு ஏற்கனவே முறை சென்று வந்திருக்கிறேன்.மீண்டும் ஒரமுறை சென்று வர ஆசை ஏற்பட்டதால் ,கடந்த வெள்ளியன்று என் நண்பருடன் சென்று வந்தேன்.சதுரகிரி மலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலை சதுரகிரி.ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோவில் இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ பயணித்தால் வத்திராயிருப்பு வரும்.அங்கிருந்து 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறையை அடையலாம்.இதுதான் சதுரகிரி அடிவாரம்.இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமஹாலிங்கம்,சந்தன மஹாலிங்கம் கோயிலை அடையலாம்.போன வருசம் நான் போனபோது சுனை,அருவி என ரம்மியமாக இருந்தது.இந்த முறை மழை இல்லாததால் சுனையில் நீர் இல்லை.மலைக்கோயில் சென்றால்தான் குளிக்கவே முடியும் என சொல்லிவிட்டனர்.வெளியூர் பக்தர்கள் குளிக்க,காலைக்கடன் முடிக்க நீர் இல்லாமல் அல்லாடியது ஒரு சங்கடம்.சதுரகிரி மலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் நடந்தாலும் அலுப்பு தெரியாது.கால் வலிக்காது இதுதான் அதன் அபூர்வ சக்தி.முதன் முறையாக மலையேறிய என் நண்பரும் இதையே சொன்னார்.அமாவாசை ,பெளர்ணமியில் 40,000 பக்தர்கள் வரை வருகிறார்களாம்.எல்லாம் சன் டிவி ,தினகரன் விளம்பர உபயம்.மலைப்பாதயில் குரங்குகள் அட்டகாசம் அதிகம்.சந்தன மஹாலிங்கம் அருகில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது.அதை கண்டு நான் மிரண்டு விட்டேன்.அப்படி ஒரு உக்கிரம்.மாலை 6 மணி.நானும் என் நண்பரும்தான் அங்கு இருக்கிறோம்.அதன் அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தில் சித்தர் உருவமும் தெரிகிறது.அதில் விபூசி பூசி அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.,மொத்தமாக 4 மணி நேரத்தில் மலையேறிவிட்டோம்.இது அதிகம்தான்.உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து போகணுமே.வரும்போது 3 மணி நேரம்தான்.அதிக ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.வழியெல்லாம் இப்போது கடைகள்.அமாவாசை மற்றும் ஞாயிற்றுகிழமை மட்டும்தானாம்.நெல்லிக்காய் சாப்பிட்டுக்கொண்டே நடந்தால் நாவல் ஊற்று சுனையில் தண்ணீர் குடிக்கும்போது அவ்வளவு சுவை.எவ்வளவு கடும் வறட்சியிலும் இந்த சுனையில் நீர் இருக்குமாம்.மலையுச்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல்லி மரங்களாக இருக்கிறது..இங்குள்ள ஒரு வகை மரத்தின் பால் முகத்தில் பட்டால் முகம் வீங்கி கொண்டே செல்லுமாம்.அதன்பெயரே மொகரை வீங்கிதான்.மூன்று தினம் சந்தனம் பூசி வந்தால் வீக்கம் குறைந்துவிடுமாம்.மரத்திற்கு மரம் தாவும் அணில் .இது ரொம்ப பெரிதாக இருக்கிறது.இதை நான் பார்த்தேன்.`சதுரகிரி என்ற பெயர் ஏன் வந்தது?சதுரகிரி மலையானது மேரு முதலிய எட்டு வகை மலைகளுக்கும் தலையானது என்கிறது சதுரகிரி புராணம்.கிழக்கு திசையில் இந்திரகிரி,மேற்கு திசையில் வருணகிரி,வடக்கு திசையில் குபேர கிரி ,தெற்கு திசையில் ஏம கிரி இப்படி ஒரு சதுரம் போல அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் சிவகிரி,விஷ்ணு கிரி,சித்த கிரி,ஆகிய்ட நான்கு மலைகள்.மகாலிங்கம் கோயிலுக்கு தென்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் தவசி குகை அவசியம் செல்ல வேண்டிய இடம்.செல்லும் வழி அடர்ந்த காடு.கரடிகள் நிறைய உலாவும் இடம்.மலைவாசிகள் துணையோடு செல்வது நலம்..எங்க குரூப் போனபோது கரடி குட்டியுடன் குடும்பமாக கிராஸ் செய்தது.வேர்த்துவிட்டது..அங்கு கூட்டி செல்லும் கைடுக்கு 400 ரூபாய்..கரடி வந்தா உசார் பண்றதுதான் அவரின் முக்கிய வேலை.தவசி குகை செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மரம் இருக்கு.அந்த மரத்தில் இருந்து வடியும் பால் ரத்த சிவப்பாக இருக்கிறது.அதன் கீழே தேங்கியிருக்கும் பால் ஆட்டு ரத்தம் கொட்டியது போல திகில் கிளப்பியது.மரத்தின் பெயர் என்ன தெரியுமா? ரத்த காட்டேரி மரம்.தவசி குகையின் அருகில் மஞ்சள் நீர் நிறம்பிய சுனை இருக்கிறது.தங்கம் போல அந்த நீர் மினு மினுக்கிறது...தங்க பஸ்பம் போல...குடிச்சா வேலை செய்யுமோ.அரையடி அகலமுள்ள பலகை கல்லால் இன்னொரு கல் கொண்டு செதுக்கப்பட்ட அபூர்வமான வினாயகர் சிலையையும் அந்த அடர்ந்த காட்டுக்குள் பார்த்தோம்.தபசு பாறை என்பது சித்தர்கள் மீட்டிங் போடும் இடம் மாதிரியாம்.அத்ற்கேற்றவாறு வட்ட வடிவான அமரக்கூடிய பலகைகள் 12 இருக்கின்றன...சந்தன மகாலிங்கம் ,சுந்தர மகாலிங்கம் என இரு லிங்கங்கள் தனித்தனி கோயிலாக உள்ளன..கோரக்கர் குகை வந்தால்தான் பாதிதூரம் வந்ததாக அர்த்தம்.ஆனா அதுவரை நடப்பதற்குள் உடலில் உள்ள நீர் எல்லாம் வியர்வையாக வந்துவிடும்.கோரக்கர் குகையில் இப்போது சாமியார் பெண்ன்மணி வய்தானவர் இருக்கிறார்.பிஸ்கட் பாக்கெட் ஒன்று கொடுத்தோம்.அதையே பிரசாதமாக மற்றவர்களுக்கு கொடுத்தார்.சந்தன மகாலிங்கம் கோயிலில் சட்டை முனி குகையில் சந்தனகட்டை எரிப்பர்..இந்த வருடம் இல்லை.பெளர்ணமி அன்றும்,அமாவாசை தினம் மட்டும்தானாம்.,சுந்தரமகாலிங்கம் தானே உருவான லிங்கம்.யானை வழிபட்ட,சித்தர்கள் பூஜித்த லிங்கம்.அங்கு நின்று தரிசனம் செய்யும்போது உடலெங்கும் சிலிர்ப்பு.அந்த லிங்கம் அபூர்வமானது அதிக சக்தி வாய்ந்தது என்பதை நாம் அதன் முன் நிற்கும்போது உணரமுடியும்.கஞ்சி மடம்...இதை மறக்ல்க முடியாது...பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு போட்டு,தங்கவும் அனுமதிக்கிறார்கள்...இப்போது கோயில் அருகில் பெரிய மண்டபம் இருப்பதால் அங்கு இரவு தங்கி கொண்டோம்.இரவில் சிலர் தபசு குகைக்கு சென்றனர்.அடேங்கப்பா இவனுகளே ஒரு சித்தர் போல ந்னு மிரண்டோம்..ஏன்னா அந்தளவு அந்த பகுதி ஒரு திகிலா இருக்கும்.இதுல அந்த அடர் வனபகுதியில ஏறி கரடிகிட்ட தப்பி தரிசனம் பண்றது சும்மாவா....சின்ன விளக்கு கையில வெச்சிருக்கிறதுதான் வழிகாட்டி.ஒவ்வொருவரும் சதுரகிரி செல்ல வேண்டும்.10 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடக்கும்போது மூலிகை காற்று அனுபவித்து மூலிகை நீர் அருந்தி செல்வதால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும்.உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.அதிக உயிர் சத்தும் அதிக வசியமும் ,தெளிவான மனநிலையும் உண்டாகும்...சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா!!
50 th entry காமராஜர்வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை வரலாறு
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
Friday, August 22, 2014
துளசி
துளசி மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.
வேறு பெயர்கள்
துழாய் (நீல நிற துளசி. இதனை கிருஷ்ண துளசி எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி
வகைகள்
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) , காடு துளசி
தாவர பெயர்கள்
Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
வளரும் தன்மை
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
மருத்துவக் குணங்கள்தொகு
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.தொற்றுநோய்களை எதிர்க்கும்.சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்ஞாபக சக்தியை அதிகரிக்கும்வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
துளசியின் மகத்துவம்
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
காட்டுத் துளசி
இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.
குணமாகும் நோய்கள
1.உண்ட விஷத்தை முறிக்க. 2.விஷஜுரம்குணமாக. 3.ஜன்னிவாத ஜுரம் குணமாக. 4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க. 5.காது குத்துவலி குணமாக. 6.காது வலி குணமாக. 7.தலைசுற்றுகுணமாக. 8.பிரசவ வலி குறைய. 9.அம்மை அதிகரிக்காதிருக்க. 10.மூத்திரத் துவாரவலி குணமாக. 11.வண்டுகடி குணமாக. 12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக. 13.எந்த வியாதியும் உண்டாகமலிருக்க. 14.தோல் சம்பந்தமான நோய் குணமாக. 15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற. 16.அஜீரணம் குணமாக. 17.கெட்டரத்தம் சுத்தமாக. 18.குஷ்ட நோய் குணமாக. 19.குளிர் காச்சல் குணமாக. 20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக. 21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க. 22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க. 23.காக்காய்வலிப்புக் குணமாக. 24.ஜலதோசம் குணமாக. 25.ஜீரண சக்தி உண்டாக. 26.தாதுவைக் கட்ட. 27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 28.இடிதாங்கியாகப் பயன்பட 29.தேள் கொட்டு குணமாக. 30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 32.வாதரோகம் குணமாக. 33.காச்சலின் போது தாகம் தணிய. 34.பித்தம் குணமாக. 35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 37.சகல விதமான வாய்வுகளும் குணமாக. 38.மாலைக்கண் குணமாக. 39.எலிக்கடி விஷம் நீங்க. 40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 42.வாந்தியை நிறுத்த. 43.தனுர்வாதம் குணமாக. 44.வாதவீக்கம் குணமாக. 45.மலேரியாக் காய்ச்சல் குணமாக. 46.வாய்வுப் பிடிப்பு குணமாக. 47.இருமல் குணமாக. 48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 50.இளைப்பு குணமாக. 51.பற்று, படர்தாமரை குணமாக. 52.சிரங்கு குணமாக. 53.கோழை, கபக்கட்டு நீங்க.
கும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில
கும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில்
இருப்பிடம்
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில்திருமஞ்சன வீதியில் உள்ளது.
பழைய பெயர்
முன்னர் இக்கோயில் வராகப்பிள்ளையார் கோயில் என்றழைக்கப்பட்டது.
தல வரலாறு
ஒரு காலத்தில் கும்பேசப்பெருமானைத் தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராகக்குளக்குரையில் வந்து தங்கினான். அங்கிருந்த விநாயகர் அந்தணச்சிறுவன்வேடங்கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். அவன் கொடுக்க மறுக்கவே அச்சிறுவன் (விநாயகர்) ஒரு கரும்பைப் பிடித்து இழுக்கவே அதனால் கோபங்கொண்ட வியாபாரி, விநாயகராகிய சிறுவனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு செல்ல, அப்போது சிறுவன் மேற்படி விநாயகர் கோயிலுக்குள் ஓடி மறைந்துவிட்டான். பிறகு வியாபாரியின் ஆயிரம் கரும்புகளும் சாரமற்றுச் சக்கை போல் ஆகிவிட்டன. இதை அறிந்த வியாபாரி வருந்தி விநாயகரிடம் வேண்டி நின்றான். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாரத்தைக் கொடுத்தார். அதுமுதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது. [1]
சோமேசுவரர்
குடந்தைக் காரோணம் திருத்தலம் கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ள பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம்,, சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. [1]சோமேசுவரர் கோயில்திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயத்தின் மூலவர் சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள்.இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் சக்கரபாணி கோயில
கும்பகோணம் சக்கரபாணி கோயில்
சக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். [1] இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.
மூலவர், தாயார்தொகு
இத்தலத்தில் உள்ள மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார்.
கோவிலைப் பற்றிதொகு
கோவில் அதன் அழகிய தூண்களுக்காக பிரசித்தி பெற்றதாகும். மூலவர், சக்கரபாணி சுவாமிக்கு 8 கைகள் உள்ளன. ராஜா சரபோஜின் நோய் இந்த கோவிலின் உள்ள கடவுளின் கிருபையால் குணப்படுத்த கூறப்படுகிறது, அதன் காரணமாக ஒரு வெண்கல படம் இங்கு உள்ளது.
கும்பகோணம் இராமசுவாமி கோயில
கும்பகோணம் இராமசுவாமி கோயில்
தல வரலாறுதொகு
இக்கோயில் குடந்தை நகரின் நடுநாயகமாக பெரிய கடைவீதியின் தென் கோடியில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620இல் கட்டப்பெற்றது.
மூலவர், தாயார்தொகு
இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இர்மாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார். [1]
சிற்பக்கூடம்தொகு
இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத் திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன.
இராமாயண ஓவியம்தொகு
இக்கோயிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.
நாகேசுவரசுவாமி கோயில்
குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன்முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி.தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில்கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் அருகேயுள்ளதிருநாகேஸ்வரம், புதுக்கோட்டைஅருகேயுள்ள பேரையூர் மற்றும்கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளநாகர்கோயில் ஆகியன பிற நாகர் கோயில்களாகும்.
தல வரலாறுதொகு
அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது.[2]கும்பகோணத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு நாகராசன் பூசித்தால் இறைவன் நாகேசப்பெருமானாகத் திகழ்கின்றார். திருநாவுக்கரசர் இத்தலப் பெருமானைப் பாடும்போது குடந்தைக் கீழ்க்கோட்டம் என்கிறார். கும்பகோணம் பாஸ்கரசேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலமே சான்றாகும்.
இறைவன், இறைவிதொகு
இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை. [3]
கோயில் அமைப்புதொகு
இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்தக் கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜ சபையும் உள்ளன.
நடராஜர் மண்டபம்
நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. இங்கு சிவகாமியம்மை நடனத்திற்குத் தாளம் போடும் பாவத்திலும், மகாவிஷ்ணு குழலூதும் பாவத்திலும் உள்ளனர்[4].
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
தல வரலாறுதொகு
தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரிலுள்ளசார்ங்கபாணி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்குஅடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும்.
சார்ங்கபாணியா, சாரங்கபாணியா?தொகு
சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம். இத்தொடர் நேராகத் திருமாலைக்குறிக்காது. பொதுமக்கள் இவ்வேற்றுமையை உணராமல் சாரங்கபாணி எனத் திருமாலை வழங்கத் தொடங்கிவிட்டனர். சார்ங்கபாணி என்னும் பெயர் உச்சரிக்க எளிமையாக இல்லாததே இதற்குக் காரணம். உலக வழக்கு இப்படி மாறிய உடனே நிகண்டு ஆசிரியர்களும் சாரங்கபாணி என்ற சொல்லுக்கே திருமால் எனக் கூறிவிட்டனர். 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாரதிதீப நிகண்டிலேயே 'விண்டுநராந்தகன் சாரங்கபாணியன் வெற்பெடுத்தோன்' என இப்பெயர் இடம்பெற்றுவிட்டது. பின்னால் வந்த அகராதிகளில் எல்லாம் சாரங்கம் என்ற சொல்லிற்குத் திருமாலின் வில் என்ற பொருள் ஏறிவிட்டது. இலக்கியத்தில் பேச்சு மொழியின் செல்வாக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். [1]
மூலவர், தாயார்தொகு
இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.
கும்பேசுவரர் கோயில
கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம்,கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இதுசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 30,181 சதுர அடி (2.9 மீ2) பரப்பளவுடையது[1]. மேலும் 1300 ஆண்டுகள் பழமையானது.[2]
தல வரலாறுதொகு
பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.[3][4][5][6]
இறைவன், இறைவிதொகு
இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன்திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள். [7]
சீனிவாச இராமானுஜன்
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887- ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்தகணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றியஎண்கோட்பாடுகளிலும் (number theory),செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]
பிறப்புதொகு
குடந்தை சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கமலத்தம்மாளுக்கும்1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர். [2]இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில்அமீனாக வேலை பார்த்தவர். [சான்று தேவை]ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.
கல்விதொகு
இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம்ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றபட்ட சில நாள்களிலேயே அவர் குடும்பம் கும்பகோணந்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார். [3]1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார். [4]கும்பகோணத்தில் சாரங்கபாணித் தெருவில் உள்ள இராமானுசனின் வீடு
கணக்கியலர்தொகு
கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில்சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.
கற்பிக்கப்படாத மேதைதொகு
மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே.
பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வுதொகு
பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்குகும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனிஎழுதிய முக்கோணவியல்(Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக,பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள்,அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை(logarithm of a complex variable),மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும்பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")தொகு
சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.
இளமையும் கல்வியும்தொகு
இராமானுசன் அஞ்சல் தலை1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.[ எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம்]. இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. [5]
1907-11 இல் படைப்பு வெள்ளம்தொகு
மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.[6] ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர்எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம்விந்தைச்சதுரங்கள் (Magic Squares) ,தொடர் பின்னம் (Continued Fractions),பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions),நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர்(hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[http://www.hinduonnet.com/fline/fl1617/16170810.htm
கலங்கரை வெளிச்சத் தொடர்தொகு
சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல்இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றிகேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர்என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடிதிருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர்சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர்நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம்அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார்.இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங்என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா.சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர்(தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.
பேரா. ஜி. ஹெச். ஹார்டிதொகு
1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில்பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.
நான்கு பொன்னான ஆண்டுகள்தொகு
கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S.(Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா.லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான்மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.
ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளிதொகு
இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர்நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுதுமுதலாவது உலகப்போர்நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ்நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்ததொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொருஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு3 + 1/6 = 19/6.x =19, y = 6 இரண்டாவது விடை.மூன்றாவது ஒருங்கு:இது கொடுக்கும் விடை: x = 117, y = 37இதுவும் ஒரு சரியான விடைதான்.நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான்.
இன்னொரு நோட்புக்கின் அற்புதம்தொகு
துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919-20 இல் செய்த ஆராய்ச்சிகள்.ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:• மூன்று நோட்புக்குகள்• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913-1914)• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம்,ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.
சிறப்புக்கள்தொகு
1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)