RAW அமைப்பில் ஒரு ரவுண்ட் !
குகன் அவர்கள் எழுதியிருக்கும் இந்திய உளவுத்துறை ரா எவ்வாறு இயங்குகிறது ? என்கிற நூலை படித்து முடித்தேன். ரா என்கிற இந்திய உளவு அமைப்பைப்பற்றி இத்தனை ஆழமான அதே சமயம் சுருக்கமான நூல் இதுவரை தமிழில் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும் . அறுபத்தி ஐந்தின் போருக்கு பின்னர் உருவான ரா அமைப்பு வங்கதேச உருவாக்கத்துக்கு தேவையான ராணுவ பயிற்சி,தகவல் சேகரிப்பு,பிரசாரம் ஆகியவற்றை செய்து சாதித்தது. கங்கா என்கிற விமானத்தை பாகிஸ்தானில் வெடிக்க விட்டு அதன் மூலமும் இரு பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படாமல் சாதித்திருக்கிறார்கள். கவ்ஹாடாவில் பாகிஸ்தான் அணுசக்தி சார்ந்து இயங்குவதையும் இந்தியா அறிந்து வைத்திருந்தது. சீனாவை கவனிக்க வைக்கப்பட்ட அமெரிக்க உதவியுடன் தயாரான கருவி காணாமல் போனது திகிலான பக்கம். மாலத்தீவில் உமா மகேஸ்வரன் ஆட்சியை கைப்பற்ற முயன்ற பொழுது அதை இந்தியா ராவின் உதவியுடன் முறியடித்தது சுவையான பக்கம் என்றால் அப்படி நடக்க ப்ளான் போட்டு கொடுத்ததே ரா தான் என்கிற வாதத்தையும் சேர்த்தே நூல் பதிவு செய்கிறது. அந்த மீட்பின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து விலகி மாலத்தீவை இந்தியா பக்கம் சேர்க்கும் கச்சிதமாக நிறைவேறியது !இந்திரா படுகொலை,ராஜீவ் படுகொலை,மும்பை குண்டுவெடிப்புகள்,கார்கில் யுத்தம்,மும்பை தாக்குதல் ஆகியவற்றில் கோட்டை விடுகிற வேலையையும் ரா செய்திருக்கிறது என்பதையும் நூல் விருப்பு வெறுப்பில்லாமல் சொல்கிறது நூல் . சியாச்சினில் பாகிஸ்தானுக்கு முன்னர் முந்திக்கொண்டு போய் நின்றது,இரண்டாவது முறை சீக்கிய பொற்கோயில் உள்ளிருந்து தீவிரவாதிகள் எடுத்துக்கொண்ட பொழுது தொடர் முற்றுகையில் கோயிலை அசுத்தப்படுதவிட்டு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்து காலிஸ்தான் இயக்கத்தின் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தது,போக்ரான் குண்டு வெடிப்பை அமெரிக்காவுக்கு தெரியாமல் நிகழ்த்தியது என்று நீளும் ராவின் சாதனைகள் இந்தியா ஒரு நாடாக நீடித்திருக்க அவசியம் என்று அழுத்தமாக பதிவு செய்து நூல் முடிகிறது ஆசிரியர் : குகன் விலை : தொன்னூறுசிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு பக்கங்கள் :128
No comments:
Post a Comment