Search This Blog

Wednesday, September 3, 2014

தாதாபாய் நவ்ரோஜி


இந்தியாவின் முதுபெரும் மனிதர்  ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறப்பாக ஆண்டார்கள் என்றே பொதுவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டு இருக்க அதைஎதிர்த்து இந்தியாவின் வீழ்ச்சிக்கும் அவலநிலைக்கும் காரணாம் ஆங்கிலேயரே என்று ஆதாரங்களோடு வாதிட்ட இந்தியாவின் முதுபெரும் மனிதர் தாதாபாய்நவ்ரோஜிஅவரின் தந்தை நான்கு வயதில் மரணமடைந்த பின்னர் அவருக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை அவரின் தாய் மானேக்பாய் பொறுப்போடு ஏற்றுக்கொண்டார். எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றபின்னர் அங்கேயே ஆசிரியராக பணியில் சேர்ந்த அவர் ஆங்கிலேய அரசை தீவிரமாக விமர்சித்து வந்தார். அவர்கள் எப்படி இந்தியாவின் வளங்களை சுரண்டி தங்கள்நாட்டை வளப்படுத்திக்கொண்டு இந்தியாவைபஞ்சத்திலும்,வறுமையிலும்,ஏழ்மையிலும் வாடவிட்டார்கள் என்று கடிதங்கள் எழுதியும்,கட்டுரைகளின் மூலமும் அவர் சுட்டிக்காட்டினார்.பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) நூலில் எப்படி ஏழைகள்,விவசாயிகள்,கைத்தொழில்கலைஞர்கள் என்கிற ஒரு பிரிவினரை சுரண்டியும் ஒடுக்கியும் வாழும் அரசு அவர்களை பெரும் வறுமையிலும்,பசியிலும் வாடவிடுகிறது. அதே சமயம் சம்பளம்,ஒய்வு ஊதியம்,தொழில் லாபம்,வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம்பெறப்படும் லாபங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து உறிஞ்சப்பட்டு இங்கிலாந்தில் சேர்கிறது என்று அவர் ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டார். அவர்இங்கிலாந்தில் இந்திய வர்த்தக அமைப்பை 1859ல் துவங்கி இந்தியர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார்.மூன்று முறை காங்கிரஸ் தலைவராகவும்,மூன்று ஆண்டுகள் ஆங்கில அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலங்களில் இந்தியாவை சுரண்டும்ஆங்கிலேயரிடம் இருந்து விடுபட்டு நமக்கான நிர்வாகத்தை நாமே மேற்கொள்ள வேண்டும் அதுவே இன்றைய அவலங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் என்றுஉறுதிபட போராடிய அவரை நினைவு கூர்வோம் 

No comments:

Post a Comment