Search This Blog

Wednesday, September 3, 2014

ஜெருசலேம்


: என் கண்ணீர் காய்கிற வரை நான் அழுதேன் மெழுகுவர்த்தியின் தீபங்கள் அணைகிற வரை நான் பிரார்த்தித்தேன் தரையில் உராய்கிற அளவுக்கு நான் மண்டியிட்டேன் நான் முகமது பற்றியும்,கிறிஸ்து பற்றியும் கேட்டேன் ஓ ஜெருசலமே ! இறைத்தூதர்களின் சுகந்தமே பூமிக்கும்,வானுக்கும் இடையே ஆன மிகச்சிறிய பாதையே ஓ ஜெருசலமே ! நீதிகளின் நகரமே நீ கருகிய விரல்கள் கலங்கிய விழிகளோடு இருக்கிற அழகிய குழந்தை புனிதர்கள் கடந்து போன பாலைவன பழச்சோலை நீ உன் தெருக்கள் சோககீதங்கள் உன் கோபுரங்கள் துக்கம் அனுசரிக்கின்றன நீ கறுப்பாடை உடுத்திய இளங்குமரி உள்ளூரில் மணிகள் ஒலிக்கின்றாய் நீ சனிக்கிழமை காலையில் ? கிறிஸ்த்துமஸ் மாலையில் யார் பிள்ளைகளுக்கு பொம்மைகள் தருவார் ஓ ஜெருசலமே ! சோகத்தின் நகரமே கண்களில் பெருங்கண்ணீர் அலைகிறது யார் உன் மீதான எல்லா ஆக்கிரமிப்பையும் நிறுத்துவார் மதங்களின் முத்தே ? உன் ரத்தம் படிந்த சுவர்களை யார் கழுவிடுவார் ? யார் திருவிவிலியத்தை காப்பார் யார் குரானை மீட்பார் யார் மனிதரை பாதுகாப்பார் ?ஓ ஜெருசலமே என் நகரமே ஓ ஜெருசலமே என் காதலே நாளை எலுமிச்சை மரங்கள் பூக்கும் ஒலிவ மரங்கள் குதூகலிக்கும் உன் கண்கள் நடனமிடும் உன் புனித கூரைகளுக்கு புலம்பெயர்ந்த புறாக்கள் மீண்டும் வரும் உன் பிள்ளைகள் மீண்டும் விளையாடுவார்கள் உன் சிவந்த மலைகளில் தந்தைகளும்.மகன்களும் சந்திப்பார்கள் என் நகரமே என் அமைதி மற்றும் ஒலிவங்களின் நகரமே 

No comments:

Post a Comment