கடவுள் தோன்றிய கதை !
சில சமயம் தோன்றும் மதத்தை தோற்றுவித்தவன் யார். வேதங்களும் புராணங்களும் எப்படி தோன்றின. ஹிந்து மதம் என்ன வித்யாசங்களோடு தோன்றியது. எப்படி இப்படி ஒரு முழு பெற்ற மதம் அதன் வேதங்களாலும் வழிமுறைகளாலும் இதனை காலமாய் வந்து கொண்டிருகிறது . திராவிடம் ஆர்யம் என்ற வேறுபாடுகள் மறைந்து எப்படி ஹிந்து என்ற ஒரே குடையின் கீழ் வந்தது. வேதங்களில் எந்த இடத்திலும் ஹிந்து என்ற ஒரு வார்த்தையே கிடையாதே. எப்படி அதிலிருந்து ஹிந்து மதம் என்று வந்தது. மிக விரிவான விளக்கங்கள் சில சமஸ்கிருத வார்த்தைகளுடன் உங்களுடன் பரிமாறி கொள்ள இந்த பதிவுகள் இருக்கும்.கடவுள் தோன்றிய கதையே வித்தியாசமானது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இல்லை. அன்றைய உலகம் மிகவும் பயம் நிரந்த மாய உலகமாக இருந்தது. காடுகள். மிருகங்கள். ஆபத்து நிறைந்த ஜந்துக்கள் அவைகளுடன் கொஞ்சம் மனிதர்கள். ஆம். இன்றைக்கு மனிதர்கள் எவ்வளவு பேரோ அவ்வளவு மிருகங்கள், இன்றைக்கு எதனை மிருகங்களோ அத்தனை மனிதர்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. கடவுள் தோன்றியதே இருட்டு அறையில் தாம். கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து. கும்மிருட்டு, பயம் இரவானால் குகைகளினுள் வாசம். பகல் வந்த பின்பு தான் உலகமே தெரியும். அறிவு வளரத மிருகமாய் மனிதன். மத எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு பாக்கியம் மனித இனத்துக்கு உண்டு. சிந்தை செய்யும் திறன். அன்றைய காடு மனிதனிடமும் இருந்த இந்த சிந்தனாசக்தி தான் கடவுளின் பிறப்பிற்கு மூலம். மலை பெய்து மின்னல் தாக்கி மரங்கள் எறிந்த பொது தான் நெருப்பு என்ற ஒன்றே அறிமுகம். அதில் மாமிசத்தை சுட்டு சாப்பிட்ட பொது தான் சுவை என்பது அறிமுகம். இரவில் மின்னல் தோன்றியதால் ஏற்பட்ட வெளிச்சம் பயத்தை தந்தாலும், அது ஒரு விதத்தில் மனித அறிவை தீமூட்டியது என்பதை மறுக்க முடியாது.ஏன் எரிகின்றது என்ற சிந்தனை சக்தி தான் பிற்காலத்தில் இயற்கையை குடைய முற்பட்டது. விளைவு. கடவுள். இருட்டை போக்க முதல் முதலில் வெளிச்சம் தந்த அந்த மின்னல் தான் கடவுள், அதற்க்கு தன உடலை தந்த மரம் கடவுள், மலை கடவுள், நதி கடவுள், மழை கடவுள்... இப்படிதான் முதல் கடவுள் தோன்றினான். இயற்கையே கடவுள் என்றான பிறகு அவனை போற்ற வேண்டாமா, வழிபட நெறிமுறைகள் வேண்டாமா. உண்டு, கடவுளை கண்டுபிடித்த அந்த முதல் மனிதன் தான் அதற்கும் விஞ்ஞானி. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கண்டுபிடித்தவனுக்கு "ரிஷி" என்று பெயர். "ரிஷி"என்றால் "பார்பான்" என்று பொருள். "பார்பனன்" என்பதும் இதன் திரிபு தான். எப்படி இந்த சிந்தனைகளுக்கு கட்டு பட்டு வாழ்வது என்பது வந்த போது தோன்றியது வேதம். வேதத்தின் உட்பொருளே "இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ, தெய்வத்தை பயன்படுத்த வேண்டும்." இப்படிதான் ஆர்ய இனத்தவரிடம் வேதம் தோன்றியது. நினைவிருக்கட்டும். இன்னும் மதம் தோன்றவில்லை. வேதம் பிறந்த பின்பு தான் சமூக அமைப்பே பலப்பட்டது. காரணம் உண்டு. கலாச்சாரத்தை கட்டுபடுத்த ஒரு ஒரு கட்டுமானம் தேவை. கட்டி காக்க ஆள்பவன் தேவை. அவனுக்கு பணிவிடை செய்ய பாட்டாளி தேவை, இதையெல்லாம் கட்டு படுத்த வேத நெறிமுறைகள் தெரிந்த ஒரு குரு தேவை.பிரித்தார்கள் மூன்றாக, ஆள்பவன் சத்ரியன் ஆனான், ஆளபடுபவன் வைசியன் ஆனான், இவர்களை நெறிபடுதுபவன் பிராமணன் ஆனான். இப்படி தோன்றிய பிரிவினகளுள், சத்ரியன் ஆள்வதற்கும், வைசியன் உழைப்பதற்கும் சென்ற பிறகு வேதத்தை கட்டி காப்பது யார். அதை நாமே செய்வோமே என்று தான் அது பிராமணர்கள் கைக்கு போனது.இப்படி வேதன் பிராமணர் கைக்கு போனதும், அறமும், கர்மாக்களும் செவ்வனே நடந்து வந்ததால் வேத மதம் பிராமண மதம் என்று ஆனது. ஆர்ய மதம், வேதம் மதமாகி, வேத மதம் , பிராமண மதமாகி இந்தியாவிற்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கும் போது இங்கு 450 இனங்கள் பக்கம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒரு மதம் போல தான். அப்படியா அப்போ இந்து மதம் இங்கு தோன்றவில்லையா என்று கேட்காதீர். நிச்சியமாக இங்கு தோன்றவில்லை. ஆர்ய மக்கள் வாழ்ந்த இடம் சிந்து சமவெளி. அது பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது.அப்படிஎன்றால் ஹிந்து மதம் என்று எவ்வாறு பெயர் வந்தது. அதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். சிந்து நாகரீகத்தின் பக்கத்தின் அன்று இருந்த இன்னொரு நாகரீகம் மெசபடோமியா. அவர்களுக்கும் சிந்து நாகரீகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடவுள் விஷியத்தில் அது இன்னும் அதிகம். ஆனால் மொழியில் அவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது. ஹிந்தி சமஸ்கிருதத்தில் ஒலிக்கும் "ச" என்ற வார்த்தையை அவர்கள் "ஹ" என்று ஒலிக்கும். சிந்து என்பது ஹிந்து என்றானது. அது மட்டும் அல்ல. இந்த வார்த்தையை official ஆகா நாம் பயன் படுத்தியதே நகைச்சுவையான ஒன்று. ஹிந்து மதம் என்ற பேர் நமக்கு நாமே வைத்து கொண்டது அல்ல. வெள்ளைகாரர்கள் நமக்கு வைத்த பெயர். நமக்கு முதல் முதலில் வைத்த பெயர் zindoo உச்சரிப்பு தவறி அது ஹிந்து என்று கோப்புகளிலும் இடம் பெற்றது. சொல்ல போனால் இது ஒரு chirstian நமக்கு சூடிய பெயர். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய வேதங்கள், மநு ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம் இவைகளில் இருந்து ஒரு பெயர் கூட இந்த மதத்திற்கு சூட்ட முடியவில்லை. ஏன் என்று கேட்காதீர். நான் முன்னமே சொல்லியிருக்கிறேன் அவ்வளவு பெரிய வேத நூலில் ஒரு இடத்தில கூட ஹிந்து என்ற ஒரு வார்த்தை கிடையாது.சரி எதோ ஒரு மதம் தோன்றியாயிற்று புத்தர் எப்போது வந்தார். அவர் ஒரு அரசரமே, அதாவது சத்ரியர். அவர் எப்படி ஒரு மதத்தை தோற்றுவித்தார். எப்படி துறவியானார். இதற்கும் வரலாற்றில் மிக பெரிய பக்கம் உண்டு. பிராமண மதத்தின் எத்ர்பாளர்களில் புத்தர் முதல் ஆளாக நிற்கிறார். கௌதமானாக பிறந்து ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்து வந்த புத்தர் எவ்வாறு துறவியானார் என்பதே கொஞ்சம் சிக்கலான ஒன்று. கூறுகிறேன். புத்தர் துறவறம் பூண்டுவத்ர்கு முன்பே அவர் பிராமண மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக தான் பிரசாரத்தை மேற்கொண்டார். காரணம் உண்டு. வேதங்களை முழுமையாக அறிந்து அத்யயனம் செய்வது என்பது பெரிய வேலை. அது மற்றவர்களின் சிறந்த பார்வைக்கு புரியும் விதத்தில் அதை மறு உருவாக்கம் செய்யப்பட்டது தான் மநுஸ்ம்ருதி. ஹிந்து மதத்தின் கோட்பாடுகள் அதன் வாழ்வு முறைகளாக கூறபடுவது முக்கால்வாசி இந்த மநுவிலிருந்து தான் வந்தது. அதாவது மூட பழக்கங்கள் என்று பொதுவாக கூறப்படும் பல மநுவிலிருந்து தான் உண்டானது.புத்தர் போர்களத்திற்கு வந்ததற்கான காரணங்களுள் ஒன்றை விளக்குகிறேன். கொஞ்சம் முகம் சுளிக்கும் படி தான் இருக்கும். அனால் அதை பற்றிய ஸ்லோகமே இப்படி தான் இருக்கிறது. பிராமணர்கள் சொன்னார்கள்,ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வலமாக இருக்க, அக்னி வளர்க்க வேண்டும், அதில் பசுக்களை பலியிட வேண்டும் என்று. இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். பசு என்பது நாம் இப்போது அழைக்கும் படி மாடு என்றல்ல, பசு என்பது எதாவது நாலு கால் மிருகதையே குறிக்கும். பின்னாளில் அது பசு என்றாக மாறியது வேறு கதை. யாகம் வளர்த்து அதில் பசுக்களை பலியிட்டு புண்ணியம் பெறுவது தான் இப்போதைய வேலை. யார் யாகம் வளர்ப்பது. ? அதையும் நாங்களே செய்கிறோம், எங்களிடம் தான் வேதங்கள் இருகின்றதே, மநு இருக்கின்றதே அதில் இதை பற்றி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன என அழுத்தமாக சொன்னார்கள்.பிராமணர்கள் மந்திரம் சொல்வது யாருக்கும் புரியவில்லை. காரணம் அப்போது மக்களிடையே இருந்த மொழி பிராக்ருத மொழி. சமஸ்கிருதம் வேததிர்க்காகவே உருவானது. இந்த ஒரு சமயத்தில் தான் புத்தர் அந்த கொடுமையும் ஆபாசத்தையும் கண்டு கொதித்தார்.
No comments:
Post a Comment