இந்திய புள்ளியியல் துறையின் தந்தை மகலனோபிஸ் !
மகலனோபிஸ் இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணிதமற்றும் புள்ளியியல் மேதை. பிரம்ம சமாஜதிலும் ,வங்கத்தின் சமூக இயக்கங்களிலும் முக்கிய பங்காற்றிய கல்வியறிவில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த இவர் வங்கத்தின் மாநில கல்லூரியில் இயற்பியல்படித்தார். அங்கே ஜெகதீஸ் சந்திர போஸ்,பி.சி.ராய் முதலிய அற்புதமான ஆசான்கள் அவருக்கு பாடம் எடுத்தார்கள். இயற்பியலில் பட்டம் பெற்ற பின்புகேம்ப்ரிட்ஜ் பல்கலையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று பயணம் போன இவர் ரயிலை தவற விட்டதால் தங்கியிருந்த இடத்தின் சூழல் பிடிக்க கிங்க்ஸ் கல்லூரியில் படித்தார். பட்டங்கள் பெற்ற பின்பு வங்கம் திரும்பிஇயற்பியல் பேராசிரியர் ஆனார்.அவரின் ஆர்வம் எல்லாம் மனிதர்களின் அன்றாட சிக்கல்களுக்கு எப்படி புள்ளியியலை பயன்படுத்துவது என்பதிலேயே இருந்தது. நண்பர்களுடன் இணைந்துதேசிய புள்ளியியல் நிறுவனத்தை விடுதலைக்கு முன்னரே துவங்கினார். மானுடவியல்,சமூக பொருளாதார காரணிகள்,உயிரியல்,வானியல் .பயிர் வளர்ச்சிஎன்று பலவற்றை புள்ளியியல் மூலம் இந்தியாவில் ஆய்ந்தார். புள்ளியியலை கொண்டு வெள்ளத்தடுப்பு பணிகளையும் முன்னெடுத்தார்.இரண்டு வெவ்வேறு தரவுகளை ஒப்பிட அவரின் மகலநோபிஸ் தொலைவு பயன்படுகிறது. ஐநா சபையின் புள்ளியியல் துணை கமிசனின் தலைவராக பணியாற்றிய பின் இந்தியதிட்டக்குழுவில் இணைந்தார் அவர். அவரின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் பதினேழு தொழில் துறைகள் தேசிய மயமாக்கப்பட்டன. தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. புதுகம்பனிகளை ஆரம்பிக்க,உற்பத்தியை பெருக்க,புது பொருட்களை தயாரிக்க அரசு உரிமம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் அவராலே துவங்கப்பட்டது. இந்தியாவின்கணக்கெடுப்புகளை இன்றைக்கும் முன்னெடுக்கிற வேலையை அந்நிறுவனமே செய்கிறது. தான் இறக்கிற வரை ஓயாமல் ஆய்வுகளிலும்,அறிவியலை மக்களுக்கு செலுத்துவதிலும் ஈடுபட்ட அவரின் பிறந்தநாள் தேசிய புள்ளியியல் தினமாககொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment