Search This Blog

Friday, September 5, 2014

சில்வஸ்டர் ஸ்டால்லோன் வாழ்க்கை


ஹாலிவுட்டின் அற்புதமான ஹீரோக்களில் சில்வஸ்டர் ஸ்டால்லோன்னுக்கு தனிஇடம் உண்டு. எக்கச்சக்க ஹிட்களை தொடர்ந்து கொடுக்கும் அவரின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள்,போராட்டங்கள் எல்லாமும் கேட்பவரைஉத்வேகப்படுத்தும்.அவரின் முகத்தின் வலது பாகம் செயலிழந்து இருந்தது. அவரின் பேச்சு தெளிவாகஇருக்காது. ஹாலிவுடில் நடிக்கலாம் என்று வாய்ப்புகள் தேடிப்போனால் நிராகரிப்பே அவருக்கு பெரும்பாலும் பரிசாக கிடைத்தது. நியூ ஜெர்ஸி பேருந்து டெர்மினலில் பல மூன்று வாரம் தங்க இடமில்லாமல் தூங்கிக்கொண்டுஇருந்தார் அவர். வறுமை வாட்டியெடுக்க தன்னுடைய செல்ல நாயை வெறும் இருபத்தைந்து டாலருக்கு விற்றார் அவர்முகமது அலியின் குத்துச்சண்டை போட்டியை பார்த்ததும் தான் அவருக்கு ராக்கி படத்துக்கான கதை தோன்றியது. அதோடு பலரின் கதவுகளை தட்டினார். கதைபிடித்திருந்தாலும் நீ நடிக்க கூடாது என்று சொல்லி ஒன்னே கால் லட்ச டாலரில் துவங்கி மூன்று லட்சம் டாலர் வரை சம்பளம் பேசினார்கள். ஆனால்,நான் நடிப்பேன் என்று உறுதியாக அவர் நிற்க வெறும் முப்பத்தைந்துஆயிரம் டாலர் மட்டுமே அவருக்கு சம்பளம் என்றானது. அவரின் செல்ல நாயை அதில் பதினைந்தாயிரம் டாலரை செலவு செய்து கண்டுபிடித்து படத்தில் நடிக்கவைத்தார். படம் இருநூறு மில்லியன் டாலர்களை அள்ளியது. தோல்விகளுக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முன்னேறுவது தான் வாழ்க்கையை அழகாக்குகிறதுஇல்லையா ?

No comments:

Post a Comment