
ஒரு ஓவியம் ஒரு புரட்சியில் மாபெரும் பங்குவகிக்க முடியுமா ?முடியும் என நிரூபித்தது ழான் பால் மாரட்டின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம் .பிரெஞ்சு புரட்சிக்கான விதைகளாக பத்திரிகையின் எழுத்துக்களை மாற்றிய பிதாமகர் தான் இந்த மாரட்.
அவரை கத்தியால் சார்லோட் கோர்டே எனும் பெண் குத்திக்கொல்வதை சிதைக்கும் ஓவியம் தான் பிரெஞ்சு புரட்சி மாபெரும் அளவில் பரவுவதில் முக்கியமான பங்கு வகித்தது .பல மக்கள் புரட்சி என்கிற பெயரில் கொல்லப்படுவதையும் மன்னர் கொல்லப்படுவதையும் விரும்பாத கோர்டே இச்செயலை செய்ததாக கூறப்பட்டாலும் ,இந்த ஓவியம் புரட்சியின் வீரியத்தை அதிகப்படுத்தவே செய்தது .
அதிலும் மாரட் ஒரு வகையான சரும நோயால் பாதிக்கப்பட்டு குளியல் அறையில் இருந்தே எப்பொழுதும் இயங்கிக்கொண்டு இருந்தார். அவரை மனுகொடுக்க சந்திக்கிறேன் என்றுப் வந்து குளியலறையில் வைத்து குத்தி கொலை முடிக்கப்பட்டது.
உண்மையில் அதற்கு முந்தைய தினம் தான் ஓவியர் மாரட்டின் வீட்டுக்கு போய் வந்திருந்தார். அந்த வீட்டின் குளியலறை,சுவர்கள்,மாரட் என்கிற இதழியலாளரின் பேனா ஆகியவை அவரின் நினைவில் அப்படியே இருந்தன. ஓவியம் தீட்டவேண்டும் என்று அவர் கேட்டுகொள்ளப்பட்டதும் அவர் மாரட்டின் உடலை பார்த்தார். அது அழுகிப்போய் இருந்தது.
டேவிட் அப்படி காட்சிப்படுத்தாமல் மாரட் இறந்து கொண்டு இருப்பது போலவும்,அவரின் கண்கள் படிப்படியாக மரணத்தை நோக்கி நகர்வதால் மூடிக்கொள்வது போலவும்,அவரின் தலை அவரின் தோளின் மீது படிவதும் அவரின் வலது கரம் நிலத்தை நோக்கி சரிவதைப் போலவும் ஓவியம் வரையப்பட்டு நடந்த சம்பவத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தியது. மாரட் ஓவியத்தில் ஐந்து பிள்ளைகளை கணவனை போரில் இழந்த மனைவிக்கு உதவுவதற்காக கடிதம் தீட்டுவதும் காட்சிப்படுத்தப்பட்டு அவர் எத்தகு எளிமையானவர் என்பது புலப்படுத்தப்படுகிறது.
டேவிட்டின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த ஓவியம் ஆயிரம் சங்கதிகளை சொல்லாமல் சொல்கிறது .கத்தி அதிகாரம் ,மாரட் மாறாத பத்திரிகையாளன் ,ரத்தம் புரட்சிக்கான (சிந்தனை புரட்சி )நீர் என கொள்ளலாம்
No comments:
Post a Comment