Search This Blog

Friday, September 26, 2014

திருப்பதி ஏழுமலையான் - அரிய தகவல்கள


வாழ்வில் நல்ல திருப்பத்தைத் தரும் திருத்தலம், பணம் நிரம்பி வழியும் உண்டி, அற்புத ருசி தரும் லட்டு, லட்சக்கணக்கான மொட்டைத் தலைகள், கோவிந்தா என்று உருகும் கோஷம், ஜருகண்டி என்று தேசியமயமாகிவிட்ட வார்த்தை!நமக்கெல்லாம் இப்படித் தெரிந்த திருப்பதியைவிட அந்த ஸ்தலத்தின் பிரமாண்டத்தை வெகு சிறப்பாக வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஒரே ஒரு குண்டையும் வீசியிருக்கிறார். திருப்பதி கருவறையில் இருப்பது பாலாஜி அதாவது மகாவிஷ்ணு அல்ல என்று, 13 வருடங்கள் திருப்பதியில் கோயிலுக்குப் பக்கத்திலேயே வசித்த இந்தப் புத்தக ஆசிரியரின் வயது 85.. கர்ப்பக்கிரகத்தின் மிக அருகாமையில் உள்ள புனிதமான குலசேகரப் படிக்கட்டிலிருந்து 1945-களில் அபிஷேகத்தைப் பார்த்தவர்.என்ன சொல்ல வருகிறார்? புத்தகத்தின் சாராம்சத்தை கீழே படியுங்கள் பிறகு நேரில் அவரை கண்டு எடுத்த பேட்டியைப் படிக்கலாம்.திருப்பதி திருமலையில் இருக்கும் தெய்வத்துக்குப் பெயர் இல்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்குச் சொந்தக்காரர்; அதன் உரிமையாளர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை வடமொழியில் சொல்வதானால், வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது, வேங்கடத்துக்கு உரிமையாளர் ஈஸ்வரர்.கபாலீஸ்வரரை, மயிலாப்பூர்க்காரர் என்று எவரும் சொல்வதில்லை. மதுரையில் இருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று சொல்வதில்லை. மன்னார்குடியில் இருக்கும் பெருமாளை ராஜகோபால ஸ்வாமி என்றுதான் சொல்கிறோம். மன்னார்குடிக்காரர் என்று சொல்வதில்லை. தில்லையில் இருக்கும் கடவுளை நடராஜர் என்றுதான் சொல்கிறோம். சிதம்பரத்துக்காரர் என்று சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டுமே திருவேங்கடமுடையான் என்று காரணப்பெயரால் சொல்கிறோம். அவருக்கென்று பெயர் இல்லையா?நம் முன்னோர்களான வேதகால ரிஷிகளும், தமிழ்நாட்டுச் சித்தர்கள், அகஸ்தியர் போன்றவர்களும் இவர் யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள்.தாள்ளபாக்கம் அன்னமய்யா, இவர் பேரில் 32,000 பாடல்களைப் பாடினார். அப்பேர்ப்பட்ட அவருக்கே திருவேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.எச்.எம்-.வி. கேசட் நிறுவனத்தார் ‘பாலாஜி பஞ்சரத்னம்‘ என்ற கேஸட் வெளியிட்டார்கள் முதன்முதலாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தாள்ளபாக்கம் அன்னமய்யா பாடல்களை அதில் பாடினார்கள். அதில் ஒன்றான ‘எந்த மாத்ரமு‘ பாடலின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எந்த அளவுக்கு யார் உன்னை நினைத்தால்அந்த அளவுக்கு மட்டும்தான் நீஉள்ளுக்குள்ளே எண்ணிப் பார்த்தால்மாவுக்குத் தகுந்த அப்பளம் இருக்கும்!வைஷ்ணவர்கள் உன்னை அன்புடன்விஷ்ணுவாக நினைப்பார்கள்;வேதாந்திகள் உன்னைப்பரப்பிரம்மமாகச் சொல்லுவார்கள்;சைவர்கள் சிவனென்று நினைப்பர்,ஆதி பைரவர் என்று காபாலிகர்கள்அடித்துச் சொல்வார்கள்;சாக்தர்கள் நீ சக்தி ரூபம்என்று நினைப்பார்கள்தர்சனமார்க்கத்தில் வந்தவர்கள்அவர்கள் எண்ணப்படி துதிப்பார்கள்இதே மாதிரிதான் திருவையாறு தியாகய்யர், பூர்விகல்யாணி ராகத்தில் ‘நீ யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா – யாரென்று தெரியவில்லையே‘ என்று திருவேங்கடமுடையானைத் தரிசனம் செய்தபிறகு பாடி இருக்கிறார். ஆகவே மற்ற தெய்வங்கள் மாதிரி இவருக்குத் தனிப்பெயர் கிடையாது.திருமலைக் கோயிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்தச் சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் திருப்பதியிலிருக்கும் கடவுளை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. ஆகவே சீனிவாசன் என்ற பெயர் ஏழுலையானுக்குப் பொருந்தாது.திருவேங்கடமுடையான் விக்ரகத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவிகிதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகத்திலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக, போக முத்திரைகள் இருக்கின்றன. இவை ஸ்ரீ அலர்மேல் மங்கையின் அம்சங்கள். மற்ற ஊர்களில் இருக்கும் சீனிவாசன் சிலைகளில் கிடையாது. ஸ்ரீ அலர்மேல் மங்கையும் ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள்.500 வருஷமாக, திருவேங்கடமுடையான், விஷ்ணுதான் என்று சொல்லப்பட்டு, இப்போது நம்பப்படுகிறது.ஸ்ரீ சிவாய சுப்ரமண்ய ஸ்வாமிஜி அமெரிக்கர்; வெள்ளைக்காரர். இந்து மதத்திற்கு விரும்பி மதம் மாறியவர். இவருக்கு அமெரிக்காவில் பல இடங்களில் ஆசிரமங்கள் இருக்கின்றன. பல செல்வாக்கான அமெரிக்கர்கள் இவரின் சிஷ்யர்கள். இவர் சில வருஷங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். இவருடன் ஒரு பிரபல கனடா நாட்டுக் கணிப்பொறி நிபுணரும் வந்திருந்தார். இவர்கள் திருப்பதி, இராமேஸ்வரம் கோயில்களுக்குச் சென்று வந்தார்கள். அதன்பின் இவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சிற்ப சாஸ்திர அறிஞர்களான – கணபதி ஸ்தபதி, முத்தையா ஸ்தபதி போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்தக் கருத்தரங்கின் முடிவுகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் கணிப்பொறி உதவியுடன் கிராஃபிக்ஸ் போடப்பட்டு விஷ்ணு மூர்த்தத்திற்கு எத்தனை விதமான தோற்றங்கள் ஏற்படுத்தமுடியும் என்பது ஆராயப்பட்டது. 24 வகைத் தோற்றங்கள் விஷ்ணு மூர்த்தத்திற்கு செய்யமுடியும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த 24 வகைத் தோற்றத்தில் திருவேங்கடமுடையான் திருமேனி வரவில்லை.இவரது சிலையில் எல்லா தெய்வங்களின் அம்சங்களும் உள்ளன. இவரது தலைப்பகுதி (சிரஸ்) சிவபெருமானுடைய அம்சங்களோடு இருக்கிறது. அலைஅலையாய் புரளும் சடை, இரண்டு கைகளிலும் நாகாபரணங்கள், பக்கவாட்டில் செருகிய காதுகள், காதில் காதணிகள் – அதாவது தோடுடைய செவியன் என்பது பொருந்தும். அதேபோல் இடுப்பு வரை செல்லும் சடைமுடி – இவை எல்லாம் அந்தத் திருமேனியில் இருக்கின்றன. தேவாரத்தில் சிவபெருமானுடைய தோற்றத்தைப் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. அவையாவும் அப்படியே இச்சிலைக்குப் பொருந்தி இருக்கின்றன.ஆழ்வார்களும், திருவேங்கடமுடையானிடம் காணப்படும் சிவாம்சத்தை விவரித்துள்ளனர்.பேயாழ்வார்-தாழ்சடையும் நீண்முடியு மொண் மழுவுஞ் சக்கரமும்சூழரவும் பொன்னாணுந் தோன்றுமால் – சூழும்திரண்டருவி பாயுந் திருமலைமே வெந்தைக்குஇரண்டுருவு மொன்றா யிசைந்துஎன்றும்,பூதத்தாழ்வார்-பொன் திகழுமேனிப் புரிசடையம் புண்ணியனும்நின்றுலகளந் தாய நெடுமாலும் – என்றும்இருவரங்கத் தாற்றிவ ரேனும் – ஒருவன்ஒருவனங்கத் தென்று முளன்என்றும் பாடியுள்ளனர்.பேயாழ்வார், பூதத்தாழ்வார் போன்றவர்கள் தாங்கள் எப்படி திருவேங்கடமுடையானைத் தரிசித்தார்களோ, அப்படியே உள்ளது உள்ளபடி பாடினார்கள். திருவேங்கடமுடையானிடம் சிவாம்சம் உண்டு என்று உறுதி செய்தனர்.திருவேங்கடமுடையான் திருமேனியில் சங்கு – சக்கரம் கிடையாது. அவை செயற்கை. அதாவது உலோகத்தில் செய்து, விக்ரகத்தில் பொருத்தியிருக்கிறார்கள். அதாவது திருவேங்கடமுடையானுக்கு நாமமும் செயற்கை; சங்கு சக்கரமும் செயற்கை. இந்த ரகசியம் வெளியில் கசியாமல் 500 வருடங்களாக பாதுகாக்கப்படுகிறது.திருவேங்கடமுடையான் ஆஜானுபாகுவாக இருக்கிறார். அவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறு விக்ரகம் தேவைப்பட்டது. ஆகவே, மூலவர் திருமேனிபோல் ஒரு சிறு விக்ரகம் கி.பி.966ஆம் ஆண்டில் வெள்ளியில் செய்யப்பட்டது. இந்தச் சிறு விக்ரகத்திற்கு, பல்லவக் குறுநில மன்னன் சக்தி விடங்கனின் அரசி காடவன் பெருந்தேவி சில நகைகளையும் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தாள். ஜூன் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை கி.பி.966-ல் இது நடந்தது. இந்தச் செய்தி 8.6.966 கல்வெட்டில் விவரமாக இருக்கிறது. இந்தக் கல்வெட்டு திருமலைக் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் தமிழ் எழுத்தில் 16 வரிகளில் இருக்கிறது. 10 விதமான நகைகள், திருமுடி, 23 வைரங்கள், 16 முத்துக்கள் கொண்ட தோடுகள், அட்டிகை, ஒட்டியாணம், 4 வளையம், காரை முதலிய நகைகள், மொத்த எடை 47 கழஞ்சு பொன். இந்தச் சிறு திருவேங்கடமுடையானுக்கும் சங்கு – சக்கரம் கிடையாது. மூலவரின் அமைப்பிலேயே வார்க்கப்பட்டதனால் சங்கு சக்கரம் கிடையாது.விஷ்ணு அம்சம் திருவேங்கடமுடையானிடம் இருக்கிறது. ஆனால் இது முழு விஷ்ணு கோயில் இல்லை. விஷ்ணு கோயில்களில், மகாலஷ்மி சந்நிதி இருக்கும். இங்கு இல்லை. சுதர்சன ஆழ்வாருக்கு மற்ற கோயில்களில் சந்நிதி இருக்கும்; இங்கு இல்லை. மற்ற கோயில்களில் ஆழ்வார்களுக்குச் சந்நிதி இருக்கும். இங்கே இல்லை. கருடாழ்வார் சந்நிதியே 1512-ல்தான் கட்டப்பட்டது. அனுமன் சிலை 1860-ல் வைக்கப்பட்டது. மற்ற விஷ்ணு கோயில்களில், ஒன்று தென்கலை நாமம் போடப்பட்டிருக்கும். அல்லது வடகலை நாமம் போடப்பட்டிருக்கும், ஆனால் இங்கு உள்ள நாமம் வடகலையும் இல்லை; தென் கலையும் இல்லை, நாமமே இல்லாத திருவேங்கடமுடையானின் ஓவியங்கள், (300 வருஷம் பழமையானவை). இப்போது இருக்கின்றன. மற்ற விஷ்ணு கோயில்களில், ஒன்று பாஞ்சராத்ர பூஜை முறையோ வைகானச மார்க்க முறையோ பின்பற்றப்படும். இங்கே பஞ்சராத்ரமும் இல்லை; வைகானசமும் இல்லை. இதை நான் சொல்லவில்லை. கோயில் பிரதான அர்ச்சகரே இதுபற்றிப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். 108 விஷ்ணு ஸ்தலங்கள், அதன் முக்கியத்துவத் தகுதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் திருமலைக்கு முதலில் இடம் இல்லை. ஆகவே இது முழு விஷ்ணு கோயில் இல்லை.சிவன், விஷ்ணு அம்சங்கள் தவிர, திருவேங்கடமுடையானின் திருமேனியில் அம்பாள் அம்சங்களும் உள்ளன. சிம்ம வலாடம், யோக முத்திரை, போக முத்திரை, வரத முத்திரை, கட்டிய விலம்பித முத்திரைகள், பாதத்தில் மெட்டி, கொலு-சு, தண்டை ஆகியவையெல்லாம் இருக்கின்றன. இவை யாவும் ஸ்ரீ அலர்மேல் மங்கையின் அடையாளங்கள். கட்டிய விலம்பித ஹஸ்தம் அம்பாளுக்கே உரியது. விஷ்ணுவு-க்கு கிடையாது. காஞ்சி காமாட்சி, திருவிடை மருதூர் மூகாம்பிகை, கன்னியாகுமரி பகவதி அம்மன், திருவையாறு தர்மசம்வர்தினி, மயிலாடுதுறை மூகாம்பிகை ஆகிய தெய்வச் சிலைகளில் கட்டிய விலம்பித ஹஸ்த முத்திரையைக் காணலாம். கேரளாவின், பாரதபுழா ஆற்றின் கரையில் உள்ள பகவதி அம்மன் சிலை அப்படியே திருவேங்கடமுடையான் மாதிரி தோற்றமளிக்கிறது.திருவேங்கடமுடையானின் திருமேனியிலுள்ள இந்தப் பெண் அம்சங்களை யாரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. நம் கண்களால் பார்க்கலாம். தவிர சில பூஜைகளும் அம்பாள் கோயில் பூஜை முறைகளை ஒத்திருக்கிறது. திருவேங்கடமுடையானுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம். வஸ்திரம் 21 முழம் புடவை, மஞ்சள் அபிஷேகம், நவராத்திரியில் பிரும்மோற்சவம் முதலியன நடத்தப்படுகின்றன. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வில்வம் அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது மார்கழி மாத அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. வில்வம் சிவனுக்கு உரியது.சிவராத்திரியன்று, ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு வீதியுலா நடைபெறுகிறது.எல்லா விஷ்ணு கோயில்களிலும், விஷ்ணு சகஸ்ரநாமம்தான் அர்ச்சனையின்போது சொல்லப்படுகிறது. ஆனால் திருமலைக் கோயிலில் அப்படியில்லை. வேங்கடேச சகஸ்ரநாமம்தான் சொல்லப்படுகிறது. வேங்கடேச சகஸ்ரநாமத்தில் முதல் வார்த்தை வேங்கடேசாய நம: அடுத்த வார்த்தை விரூபாக்ஷாய நம: விரூபாக்ஷன் என்பது சிவனின் பெயர். சோழப் பேரரசு உள்ளவரை, திருவேங்கடமுடையானுக்கு நெற்றியில் நாமம் இல்லை. சங்கு சக்கரம் கிடையாது.அதே மாதிரி வெறுங்கை வேடன் என்பது திருவேங்கடமுடையானின் பவித்ரமான பழைய பெயர்.வேடன் என்பவன் உயிர்களைப் பறிப்பவன், அதாவது சம்காரத் தொழில் செய்பவர் சிவன், திருவேங்கடமுடையான் உயிர்களைப் பறித்து, ஆன்மாக்களுக்கு மோட்சம் கொடுக்கிறார்.எந்த ஓர் இந்துக் கடவுளுக்கும் கையில் ஏதாவது ஓர் ஆயுதம் சிலையில் வடிக்கப் பெற்றிருக்கும்.எந்த சாத்வீக சாந்தமான தெய்வத்தின் சிலையிலும் ஓர் அயுதம் இருக்கும். ஆனால் திருவேங்கடமுடையானின் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. நிராயுதபாணி. ஆகவே திருவேங்கடமுடையானுக்குப் பழைய தமிழ் இலக்கியத்தில் வெறுங்கை வேடன் என்று பெயர்.முடியிறக்குதல் ஒரு முக்கியமான நேர்த்திக் கடன். முடியிறக்குதல் பிரபல முருகன் கோயில்களாகிய திருப்பரங்குன்றம், பழனி போன்ற கோயில்களில்தான் உண்டு. விஷ்ணு கோயில்களில் இல்லை.ஆகவே திருவேங்கடமுடையான் தன்னிடத்தே சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் அம்சங்களைக் கொண்டிருக்கிறார்.1801-ம் வருஷம் திருமலைக்கோயிலை ஆங்கிலேயர்கள் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர். அப்போது திருப்பதி, செங்கல்பட்டு கலெக்டர் பொறுப்பில் இருந்தது. அதன், முதல் கலெக்டர் ஜியோ ஸ்ட்ராட்டன், திருமலைக் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்குமுன் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, திருமலைக்கோயில் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து, ஓர் அறிக்கை தயார் செய்தார். அந்த அறிக்கைக்கு ‘சவால்-இ-ஜவாப்‘ என்று பெயர். இந்த அறிக்கை எல்லா கோர்ட்டுகளிலும் முக்கியமான ஆவணமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைக் கமிஷன் முன்பு கோயில் அர்ச்சகர்கள், ஸ்தானட்டாகள், ஜீயர், அய்யங்கார் போன்றோர் ஆஜராகிப் பதில் அளித்தார்கள். கேள்வியும் பதிலும் வருமாறு:கமிஷன் கேள்வி 18: வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.கேள்வி 30: உலகத்தில் எவ்வளவோ கோயில்கள் இருக்கும்போது, ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் பணம் மற்றும் பல காணிக்கைகள் பெரிய அளவில் வருகிறது?பதில்: ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு வந்தார். ஒரு யந்திரத்தையும், ஆகர்ஷண சக்கரத்தையும் கடவுளின் பத்ம பீடத்தில் அமைத்தார். அதனால் பணவரவு இருக்கிறது.இங்கு பாலா ஸ்ரீஅலர்மேல்மங்கை வீற்றிருக்கிறாள், மரியாதை நிமித்தம் பாலாவை பாலாஜி என்று அழைக்கிறோம்.திருமலைக் கோயிலில் 1180 கல்வெட்டுகள் இருக்கின்றன. இதில் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கின்றன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் இருக்கின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டில்கூட ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி பெயர்கள் இல்லை. ஸ்ரீ அலர்மேல் மங்கையின் பெயர் மட்டுமே உள்ளது. அப்படியானால், கீழ்த் திருப்பதிக்கு ஏழு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சானூரில் இருக்கும் தெய்வம் யார்? சோழர் காலத்தில் அந்த ஊருக்குச் சுகபுரி அல்லது சிரத்தானூர் என்று பெயர். அங்கே பரமேசுவர விண்ணகரம் என்ற பெயரில் ஒரு விஷ்ணு கோயிலும், ஒரு சிவன் கோயிலும் இருந்தன. இந்தக் கோயில் கி.பி.1310-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதன் இடிபாடுகள் இன்னமும் இருக்கின்றன. பிறகு அந்தப்பகுதி நெசவாளர்களான, பத்மசாலியர் தங்கள் குலதெய்வமான பத்மாவதி தேவிக்குக் கோயில் கட்டினார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்புவரை இந்த ஊருக்குப் பெயர் திருச்சானூர்தான். அதன்பிறகு அலர்மேல்மங்காபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு இருக்கும் கோயிலில் உள்ள தெய்வம் ஸ்ரீ அலர்மேல் மங்கை இல்லை பத்மாவதி!’

பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை


M.S. Saravanan Original article in English: "Palani Icon: A Scientific Analysis" தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'.தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார். புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்துக்கு பல வகைகளிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளார்கள். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்களைப் பாடி உள்ளார்கள். துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம் இருக்கின்றார்கள். அனுதினமும் அங்கு வரும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்கு சாட்சி ஆவார்கள்.ஆறுபடை வீடுகளில் மணிபூரகம் எனும் மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையினை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர். மற்ற தெய்வீக நிலைகள் வருமாறு:புராண காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடல் மூலம் பழனியின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். -''என் தெய்வமே , நீ தெய்வீகத்தில் பஐமை வாய்ந்த காசி, பெனாரஸ் போன்ற இடங்களை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள இந்தப் புனித மலை மீது அமர்ந்து இருக்கின்றாய்''. சைவ சித்தாந்தக் கூற்றின்படி ஒருவர் ஞான உபதேசத்தைப் பெரும் முன்னர் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் ஆன்மாவின் நான்கு பகுதிகளைக் கடக்க வேண்டும். அவை 'கார்யா' எனும் தன்னலமற்ற சேவை, சாதனாக்களை துதிக்கும் 'கிரியா' என்பது, ஒரு குருவின் துணையோடு தியானிக்கும் 'யோகம்', மற்றும் ஆத்மார்த்தமாக தன்னை உணர்ந்து கொள்ளுதலான 'ஞானம்' என்பது. ஒருவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு முட்டையில் இருந்து புழுவாகி, புழுவில் இருந்து வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவாகி, வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவில் இருந்து கம்பளிப் பூச்சியாகி, கம்பளிப் பூச்சியில் இருந்து வண்ணத்துப் பூச்சியாகி பறப்பதைப் போல படிப்படியாக 'கார்யா', 'கிரியா', 'யோகா' போன்ற நிலைகளைக் கடந்து 'ஞான' நிலையை எட்ட வேண்டும். பழனி தண்டாயுதபாணி ஞானத்தை பிரதிபலிக்கின்றார். ஞானமே பேரானந்த மன நிலையான ஞானப் பழம் என்பதை நமக்குத் தரும். இளம் பிஞ்சு காயாகி பல்வேறு நிலைகளை கடந்து பழுக்கத் துவங்கி கடைசியாக பழமாவதைப் போலவே பழனி முருகனும் கவர்ச்சிகரமான முகப் பொலிவுடன் இருந்து கொண்டு பக்தர்களுக்கு பல்வேறு காட்சிகளிலும், ரூபங்களிலும் தரிசனம் தந்து கொண்டு அருள் மழையைப் பொழிந்தவாறு இருக்கின்றார். அவர் கொண்டுள்ள ரூபங்களில் சில:பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப்போன முஸ்லிம் மதத்தினர் கூட இங்கு வந்து அவரை வணங்குகிறார்கள். முருகனை பழனி பாட்ஷா என அன்புடன் கூறி அவரை வணங்குகிறார்கள். ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு ஒளி வெள்ளத்தைக் காட்டியபடி பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திச் செல்கிறார். தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் அதை ஒப்பிடும்போது அவற்றில் இருந்து இது வேறுபட்டு உள்ளது நன்கு தெரியும். முதலாவதாக அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன. ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது. சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்' என்றால் 'விஷம்' அல்லது 'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்' என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த முனிவருடைய சித்தர் பரம்பரை பற்றியும் இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களின் தலைவராகக் கருதப்படுபவர் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரே. அவருடைய ஏழு சிஷ்யர்களில் 'திருமூலர்' என்பவர் உண்டு. அந்த திருமூலருக்கு 'கலங்கி கஞ்சமலையான்' என்ற சிஷ்யர் இருந்தார். அந்த கலங்கி கஞ்ச மலையானுக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தார்கள். அந்த ஆறு சிஷ்யர்களில் ஒருவரே 'போகரும்'' ஆவார். இப்படியான சிஷ்ய பரம்பரைக் காட்டும் பட்டியல் கீழே உள்ளது.Golden Vimanam (at left) and Raja Gopuram, Palaniபோகரைப் பற்றிய அனைத்து செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தாந்திற்கு ஒரு தூணைப் போன்றவர். அவரே சைவ சித்தாந்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து , ஆத்மா ஞானத்தைப் பெற்று இறைவன் பாதத்தில் இணைந்து விடும் வழிமுறைகளை காட்டியவர். நவபாஷணப் பொருட்களில் கலவையைக் கொண்டு தயாரித்த முருகன் சிலையை வடிவமைப்பதிலும் போகர் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞரைப் போல தோற்றம் உள்ளதாகவும், கிழக்கு நோக்கிப் பார்த்தவாறும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகனின் சிலையோ மெல்லியதாகவும், மொட்டைத் தலையுடனும், காவி உடை அணிந்தபடியும், சாமியார் கோலத்திலும் கையில் தன்டாயுதத்தை ஏந்திக் கொண்டு தெற்கு நோக்கிப் பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது. 'நானே முதிர்ச்சி உள்ள அறிவுப் பழம் ' என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது போல அமைந்து உள்ளது.அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக மூலவருக்கு செய்யும் அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாகும். கிருத்திகை தினங்களில் சுமார் அறுநூறு முதல் எழுநூறு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. அத்தனை அபிஷேகம் செய்தும் அவற்றினால் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல், அந்த நவபாஷண சிலை எப்படி அப்படியே உள்ளது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது. உடலின் பல பாகங்களில் சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றி உள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போல சில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள்.அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது. அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அது முன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதான முன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை.கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதே ஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்து பசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது. பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட 'போகரால்' செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது.ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ள தீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள். அந்த அபிஷேகப் பொருட்கள் பலநாட்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரங்களிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல சித்த மருத்துவசாலைகள் பரவி உள்ளன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக இருக்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதினால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்புகழ் பெற்ற ஸ்தபதிகள்ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்விஞ்ஞானிகள்நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது. நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது.மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால் சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள சிலையை மாற்றி அமைப்பார் என்பதே. இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பதே.முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இந்த தருமணத்தில் நினைவில் நிற்கின்றது '' சூனியத்தில் இருந்துகொண்டு, இந்த அகண்டத்தையே ஆண்டு கொண்டு, நம் கற்பனைகளுக்கு அப்பால் உள்ளவரே கடவுள். அவர் யார் , எப்படி இருப்பார் என்பதை புரிந்து கொண்டு யார் ஒருவர் அவரை உளமார உணர்கிறார்களோ அவர்களுக்கு அவர் காட்சி அளிப்பார்''

100 வருடங்களுக்கு முன் திருப்பதி எப்படி இருந்தது..? (அரிய புகைப்படத் தொகுப்பு )


படத்தொகுப்பு இப்போது தினமும் திருப்பதியில் லட்சக்கணக்கானவர்கள்கூடுகிறார்கள். சில நாட்களில் தரிசனம் செய்ய 18-20மணி நேரங்கள் கூட ஆகின்றன. எக்கச்சக்கமானதங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள். உலகிலேயேபணக்கார கோவில் என்கிற பெருமையுடன் இலவசசாப்பாடு, இலவச லட்டு, இலவச தங்குமிடம் எல்லாம்…இதே திருப்பதி, 100 வருடங்களுக்கு முன்னர்எப்படி இருந்தது …? பக்தர்கள் எப்படிப் போய்வந்தார்கள் ..? கூட்டம் இருந்ததா …இந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சொல்லுகின்றனஅந்த சரித்திரத்தை …..!!யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றுஎனக்கு கிடைத்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு எனஇங்கே பதிவிடுகிறேன் -

Thursday, September 25, 2014

திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம


திருப்பதி கோயிலின் ரகசியம்!, மகிமை!!திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலைவாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசியங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றின் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள். திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில.....1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப்பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும். இந்த பாறைகளும் ஒரேவிதமானவை2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.  இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறையில் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை.  ஏழுமலையானின் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால் வெடிப்பதில்லை.3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்ப்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.  உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரப்பாக இருக்கும்.ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலிஷ்  போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகப் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, ரபாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குச் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.3. ஏழுமலையான் உடை 21 முழு நிளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.  வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வெரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்தும், கஸ்தூரி சைனாவிலிருந்தும், புனுகு பாரிஸ்லிருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது.  அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.8.ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து ப்க்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.9.  சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்படுகின்றன.10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்க்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகள் செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை, இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ 100 கோடி.உ12. மாமன்னர்களான இராசேந்திர சோழர்,  கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசர் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.13.ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிரிய விக்கிரகம் கி.பி. 966 ஜுன் 8 ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குருநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டது அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்தி உள்ளார்.14.திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.15. வெள்ளி கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்ச்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.16.சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெறுமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளனர். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமாள் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார் அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.18.ஏழுமலையானின் ஸ்தல விருட்சகம் புளிய மரம்.19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.20. கி.பி. 1781 ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைசேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை பிராத்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.21.ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.22. திருமலையின் புனிதத்தன்மை கருதி கி.பி. 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடிபூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடாக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கு வரும் எனக் கவலைப்பட்டார்கள்.24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.25. ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது.  ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும் .வடகலை சம்பிரதாயத்தில் "வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யபடும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.26. கி.பி. 1543 ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி. 1764ல் நிஜாம் தெளலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம்  படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.27.திருவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானை கடவுளாக வழிப்பட்டு வாழ்த்தி வணங்கிணார்.28. திருலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.

திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம


திருப்பதி கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம் பிரசாதங்களின் வரலாறு: திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன. இவைகளில் சிற்சில தவிர்த்து ஏனைய அனைத்தும் திருமலைக் கோயிலைப் பற்றியவையே. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கின்றன. கல்வெட்டுகளின்படி பார்க்கும்போது இன்றைய திருப்பதியும் திருமலையும் பல்வேறு வகையான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்று உலகின் இந்துக்கள் அனைவராலும் போற்றப்படும் கோயிலாக உருவாகியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். திருப்பதியில் உள்ள மலைமேல் குடிகொண்டிருக்கும் திருவேங்கடமுடையான் கோயிலின் பொற்காலம் என்றால் அது 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரைதான் என்று சொல்லவேண்டும். முக்கியமாக விஜயநகர அரசர்கள் ஆண்ட காலம் இது. திருமலை புகழின் உச்சியில் இருந்தது. சதா சர்வ காலமும் விழாக் காலமாக 1440 இலிருந்து 1560 வரை இருந்ததை ஏராளமான கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆண்டொன்றுக்கு பதினோறு மாதங்கள் பிரம்மோத்சவம் நடைபெற்ற காலம் இவை. மார்கழி தவிர அனைத்து மாதங்களும் திருவேங்கடத்தானுக்கு உற்சாக உற்சவங்கள், மேளதாளங்களால் வீதி ஊர்வலங்கள், விழாக்கால வழக்கமான கொண்டாட்டங்கள் (வெடிச் சத்தம் கூட உண்டு) என மலையே அதிரும்படி கலகலவென இருந்த மலை, அடுத்த இருநூறு ஆண்டுகளில் யாருமே தங்கமுடியாத சூழ்நிலைக்குக் கூட சென்றது என்பது கல்வெட்டுகளின் மூலம் பரிபூர்ணமாகத் தெரியும். 1800 ஆண்டுகளில் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்துக்கு வந்தபோது திருமலையில் மலேரிய பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகம் என மலை மேலே செல்வதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலே இருந்த அர்ச்சகக்குடும்பங்கள் (சுமார் 50 பேர்) கூட திருப்பதி அடிவாரத்துக்கு வந்துவிடவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1600 ஆண்டுகளுக்குப் பிறகு, விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சில நாயக்க ராஜாக்கள் திருமலையின் விழாக்கால நிலையை சிறிது காலமே போற்றி வந்தனர். மராத்தியர்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் திருப்பதி பகுதி ஆற்காடு நவாபின் ஆளுகையிலும், மராத்தியர் ஆளுகையிலும் மாறி மாறி வந்ததால் திருமலைக் கோயில் அரசர்கள் ஆதரவின்றி அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் போஷகர்கள் (பெரும்பாலோர் வைசியர்கள்) மட்டுமே கட்டிக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டது. பிரிட்டிஷார் வந்தபோது இந்த நிலை இன்னமும் மோசமானதுதான். கல்வெட்டுகள்தான் என்ன நடந்தது என்பதை நமக்கு ஆதாரமாகக் காண்பிக்கும் தடயங்கள். ஒவ்வொரு கல்வெட்டும் பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகிறது. நமக்குத் தேவையான சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இந்தக் கட்டுரையில் தர இருக்கிறேன். முதலில் திருப்பதி வேங்கடவன் என நினைத்தாலே நம் கண், நாசி, நாவையும் நிரப்புவது இந்த ஒரு சொல்தான்.. லட்டுதான். திருமலை வேங்கடவன் பிரசாதமாக வழங்கும் லட்டு என்றிலிருந்து ஆரம்பித்தது என்பது கல்வெட்டுகள் படி எங்கும் காணப்படவில்லை. பொதுவாக க்டந்த 200 வருடங்களாக கல்யாண உத்சவம் செய்யும்போது இனிப்பு வகையறாக்களோடு ஒன்றாக லட்டும் சேர்ப்பித்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்தான். விஜயநகர அரசர் காலங்களில்தான் உற்சவமூர்த்தியான ‘மலைகுனிய நின்ற பெருமாள்’ கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்யாண உற்சவத்தினைப் பற்றிய முதல் கல்வெட்டு கி.பி. 1546 ஆம் ஆண்டு தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வருகிறது. தாலபாக்கம் என்பது அன்னமய்யா பிறந்த ஊர். இவர் அவருக்கு என்ன உறவு எனக் கல்வெட்டில் சொல்லப்படவில்லை. இந்தக் கல்யாணோத்சவத்தில் (பெள்ளித் திருநாள் என்று எனத் தெலுங்கிலும், கல்யாணோத்சவம் என தமிழிலும், வைவாகோத்சவம் என சமுஸ்கிருதத்திலும் வடிக்கப்பட்டது) பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் நடந்த இந்தத் திருநாள் உற்சவத்தையும் திருமாமணிமண்டபத்தில் உற்சவமூர்த்தியான மலைகுனிய நின்றபெருமாள் (பின்னால், மலைகுனிய நின்றான், பின் மேலும் மலையப்பனாக சுருக்கப்பட்டது) தம் இரு தேவியருடன், ஐந்து நாட்களும் விழாக்கோலம் எங்கும் காண, கல்யாணம் செய்து கொண்ட காட்சியையும் கொஞ்சம் விவரணையாகவே இந்தக் கல்வெட்டு சொல்கிறது. ஆனால் கல்யாணத்து இனிப்பு வகையறாக்களில் ‘லட்டு’ இல்லை. திருமணத்தில் பிரசாதங்களாக வடைப்பிடி (வடை), மனோகரம் (இது மிகவும் பழைய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது) எனும் இனிப்பு, அவல், பொறி இவைகளைத் தந்ததாக இந்தக் கல்வெட்டு சொல்கிறது. மேலும் திருக்கல்யாணத்தில் ஊஞ்சல் உற்சவத்துக்காக ‘பஞ்சவண்ணப்பிடி’ என ஐந்து வர்ணங்களில் செய்யப்பட்ட அன்னமும் தயாரிக்கப்ட்டதாகவும், இந்த ஐந்து நாள் மொத்த செல்வுகளுக்காக திருமலை அய்யங்கார், ஐநூறு கட்டி வராகன் தொகை செலுத்தியதாகவும் கல்வெட்டு சொல்கிறது. அதாவது பொதுமக்களில் முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி பெருமாளுக்கு இவர்தாம் கல்யாணம் செய்வித்ததாகத் தெரிகிறது. லட்டு என்பது திருவேங்கடவன் கோயிலில் 20ஆம் நூற்றாண்டில்தான் முறைப்படியாக பிரசாதமாக வந்ததாகவும், கல்யாணம் ஐய்யங்கார் என்பவர்தாம் இப்போதைய ருசிகரமான லட்டுவுக்கு காரணகர்த்தா எனவும் தகவல் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் சென்னை (மதராஸ்) அரசாங்கத்தாரால் தி.தி.தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தாலும் மடைப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையை மிராசிகள் பெற்று வந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். இப்படி ஐந்து மிராசிகளின் பிரதிநிதியாக கல்யாணம் ஐயங்கார் உரிமை பெற்று சமையலறை நிர்வாகத்தினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாக தகவல் கூட தி.தி.தே அலுவலத்தில் இன்றும் உள்ளது. ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) எனும் ஒரு பிரார்த்தனையை ஒரு தெலுங்கர் செய்ய, அதற்கேற்றவாறு கல்யாணம் ஐயங்காரும் ஏராளமான அளவில் செய்து கொடுக்க, அந்த லட்டு பிறகு பிரசாதமாக ஏராளமானவர்கள் எடுத்துச் செல்ல, லட்டு புகழ் வையம் அறியச்செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியும் இருந்ததாக சொல்வர். (ராஜாஜி அவர்களே கல்யாணம் ஐயங்கார் செய்த லட்டுவின் பெருமையைப் போற்றியதாகவும் சொல்வர்). ஆனால் லட்டு நிச்சயமாக ஆதியிலிருந்து திருப்பதியில் பிரசாதமாக இருக்கவில்லை. வேறு என்னென்ன இந்தக் கல்வெட்டுகளில் பிரசாதங்களாக சொல்லப்பட்டிருந்தது என்பதையும் பார்ப்போம்.

ப்ரூஸ்லீ - ஒரு புதிர் சரித்திரம்!


சாமானியன் சரித்திரமாக முடியுமா? என்ற கேள்விக்கு விடை ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீ மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவரது நினைவுகள் உலகெங்கும் வியாபித்திருக்கும் கோடிக்கணக்கான சண்டை ரசிகர்களின் நினைவலைகளில் அலைபுரண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் ப்ரூஸ்லீ கதாநாயகனாக நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே நிறைய படங்களில் தலைகாட்டியிருக்கிறார். அவரது பதினெட்டு வயதுக்குள்ளாகவே இருபது படங்களில் நடித்திருந்தார்.ப்ரூஸ்லீயின் இன்னொரு பெயர் வேகம் எனலாம். சினிமாவில் ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள் (24 அசையா படங்கள்) பயன்படுத்தப்படும். ப்ரூஸ்லீயின் சண்டை போடும் வேகத்துக்காக அவர் நடிக்கும் ஆக்சன் காட்சிகளில் நொடிக்கு 34 ப்ரேம்கள் பயன்படுத்தப்பட்டதென்றால் அறிவியலை மிஞ்சிய அவரது வேகத்தை நீங்கள் கணிக்கலாம்.1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் சைனாடவுனில் பிறந்த ப்ரூஸ்லீ மூன்று வயதிருக்கும்போதே ஹாங்காங்குக்கு இடம்பெயர்ந்தார். அவரது இயற்பெயர் லீ ஜூன்பேன். அவரது பெயரை உச்சரிக்க முடியாத அமெரிக்க நர்ஸ் ஒருவர் ப்ரூஸ் என்று செல்லமாக அழைத்ததால் அதுவே அவரது இயற்பெயராக நிலைத்துவிட்டது.சிறுவயதிலேயே தற்காப்புக் கலைகளில் கற்றுத் தேர்ந்த ப்ரூஸ்லீ அநீதியை எங்கு கண்டாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவராக, ஒரு நிஜ ஹீரோவாகவே வளர்ந்தார். 1959ல் ஹாங்காங்கின் பிரபல கேங்க்ஸ்டர் ஒருவரின் மகனை நடு ரோட்டில் போட்டு பின்னி பெடலெடுத்ததால் ஹாங்காங்கின் நிழலுகம் ப்ரூஸ்லீயின் உயிரையெடுக்க வேட்டை நடத்தியது.இந்நிலையில் அமெரிக்காவுக்கு மீண்டும் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு உண்டானது. அமெரிக்கா சென்றவர் சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் நகரங்களில் தனது கல்வியினை தொடர்ந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் படித்தார். இடையிடையே தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். நடித்தார் என்று சொல்வதை விட வில்லன்களை அடித்தார் என்பதே சரியானது.தொலைக்காட்சித் தொடர்களிலும், சினிமாவிலும் ப்ரூஸ்லீ நடித்தபோது எதிரே சண்டையிடுபவரை உண்மையாகவே தாக்குவாராம். பலபேருக்கு பலமான அடிபட்டதும் உண்டு. அசுரத்தனமாக உடற்பயிற்சி செய்வது ப்ரூஸ்லீயின் பொழுதுபோக்கு. அதிவேகத்தில் ஐந்து அல்லது ஆறுமைல் தூரங்களை ஓடி அனாயசமாக கடப்பார். சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரலை மட்டும் தரையில் ஊன்றி மற்றவிரல்களை மடித்துவைத்து தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களின் பலத்தை கூட ப்ரூஸ்லீ பலப்படுத்தி இருந்தார்.பல வருட கல்விக்கும், நடிப்பிற்கும் பின்னர் அமெரிக்காவிலிருந்து தன் தாய்நாடான ஹாங்காங்குக்கு 1970 வாக்கில் திரும்பினார். கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற புகழ்பெற்ற திரைப்பட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். கோல்டன் ஹார்வெஸ்ட் தயாரிப்பில் ப்ரூஸ்லீ நடித்து வெளிவந்த 'பிக்பாஸ்' பரவலான வரவேற்பை மக்களிடையே பெற்றது. ஏற்கனவே திரைத்துறை மூலமாக இல்லாமலும் பாக்ஸிங் சேம்பியனாக ஹாங்காங் முழுக்க ப்ரூஸ்லீ அறியப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.1972ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிஸ்ட் ஆப் ப்யூரி' ப்ரூஸ்லீயின் புகழை உலகமெல்லாம் ஒலித்தது. தன்னுடைய குருநாதரை கொன்றவர்களை சீடன் பழிவாங்கும் அரதப்பழசான கதை என்றாலும் முப்பதுக்கும் மேற்பட்ட சண்டை யுக்திகளை பயன்படுத்தி படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்தும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. இதே ஆண்டு ப்ரூஸ்லீயே எழுதி இயக்கி நடித்த ‘வே டூ தி ட்ராகன்' திரைப்படம் வெளியானது. உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் கராத்தே நடிகரான சக் நாரிஸ்ஸுடன் ப்ரூஸ்லீ மோதும் க்ளைமேக்ஸ் காட்சி ரோமில் படமாக்கப்பட்டிருந்தது. இப்படம் தந்த வெற்றி ப்ரூஸ்லீக்கு படம் தயாரிக்கும் எண்ணத்தை விளைவித்தது எனலாம்.அமெரிக்க திரைப்படம் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ‘எண்டர் தி ட்ராகன்' திரைப்படத்தை ப்ரூஸ்லீ உருவாக்கினார். படத்தின் ஒவ்வொரு ப்ரேமையும் பார்த்து பார்த்து செதுக்கினார். பிரம்மாண்டமான கண்ணாடி அறையில் இரும்புக்கை வில்லனுடன் ப்ரூஸ்லீ மோதும் காட்சி ரத்தத்தை உறையச் செய்யும் வகையில் அதிரடியாக படமாக்கப்பட்டது. பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற அதிரடி நடிகராக மலர்ந்த ஜாக்கிசானும் இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் தோன்றினார்.படம் வெளிவர மூன்றுவாரம் இருந்த நிலையில் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபதாம் தேதி மர்மமான முறையில் தனது 33வது வயதில் மரணமடைந்தார். தலைவலிக்காக தூக்கமாத்திரை போட்டவர் கோமா நிலைக்கு சென்று ஹாங்காங்கின் குயின் எலிசபெத் மருத்துவமனையில் மரணமடைந்ததாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த உண்மை ப்ரூஸ்லீயோடே புதைக்கப்பட்டது.ப்ரூஸ்லீயின் மரணத்துக்குப் பின்னர் வெளியாகிய 'எண்டர் தி ட்ராகன்' திரைப்படம் பிரும்மாண்டமான வெற்றியை பெற்றது. இனிமேலும் ப்ரூஸ்லீயை காணமுடியுமா என்று பார்த்தவர்களே பலமுறை திரும்ப திரும்ப பார்த்தார்கள். அமெரிக்காவில் மட்டுமே அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் 850,000 டாலர்கள் வசூலானது. மொத்தத்தில் இருநூறு மில்லியன் டாலர்களை உலகளவில் வசூலித்தது.அவரது மகனான பிராண்டன் லீயும் தந்தையைப் போலவே திரையுலகில் நடிகராக பரிணமித்தார். வளர்ந்து வந்த நேரத்தில் 'தி க்ரோ' என்ற படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட துப்பாக்கி விபத்தில் (துப்பாக்கியில் டம்மிக்கு பதிலாக ஒரிஜினல் தோட்டாக்களை யாரோ வைத்ததாகவும் சொல்கிறார்கள்) 28 வயதிலேயே மரணமடைந்து விட்டார். ப்ரூஸ் லீ குடும்பத்தின் சோகம் தொடர்கதை ஆனது.தான் கற்ற கலையை நேசித்து அதற்கு தகுந்த மரியாதை அளித்த மாபெரும் கலைஞனான ப்ரூஸ்லீக்கு பின்னர் அவரது இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது. அவரது மகனாலும் அவரது இடத்தை நிரப்ப இயலவில்லை. குங்பூ கலையில் புதிய நுணுக்கங்களை புகுத்தியவர் என்பதால் அவரது பாணி குங்பூ ‘ப்ரூஸ் லீ குங்பூ' என்று அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. முப்பது ஆண்டுகளிலேயே உலகப்புகழ் பெற்ற அவர் இன்னமும் சில ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருப்பாரேயானால் திரையுலகிலும், தற்காப்பு கலையிலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என்பது நிச்சயம்.

சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!


சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன். சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.சொந்த பிரச்சனையாக இருக்கலாம். சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்க கொடுக்க முயற்சிக்கிறேன்.4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆசியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. ‘எதென்ஸ்’ மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. ‘டெல்பி’யில் இருந்த 6000 குடும்பங்களில் 1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள். அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள். உடலை விற்பனை செய்து, கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.கி.மு 580களில் சீன தேசம் ‘கம்பூசியஸ்’மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள். தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.‘ஜேக் தீ ரீப்பர்’ பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? ‘ஜேக்’விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.இதனை அடுத்தாற் போல் ‘எட்வட் கெய்ன்’என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘தீ சைக்கோ’ மற்றும் ‘சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்’ எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.‘கேய்ன்’ இறந்த பெண்களை தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளை கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்ட போது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.  1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர்,‘சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு ‘கோசோவோ’வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம். தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.  பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோமாக.